அளப்பறையோடு வீட்டுக்குள் வந்த தொகுப்பாளினி பிரியங்கா!! என்னது கமல் இந்த வாரிசு நடிகருக்கு மாமாவா?

Published : Oct 03, 2021, 08:45 PM IST
அளப்பறையோடு வீட்டுக்குள் வந்த தொகுப்பாளினி பிரியங்கா!! என்னது கமல் இந்த வாரிசு நடிகருக்கு மாமாவா?

சுருக்கம்

கடந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் தொகுப்பாளினி அர்ச்சனா போட்டியாளராக வந்தது போல், இந்த முறை விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளை மிகவும் காமெடியாக தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான, பிரியங்கா கலந்து கொண்டுள்ளார். இவரை தொடர்ந்து 7 ஆவது போட்டியாளராக, பிரபல வாரிசு நடிகர் ஒருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.  

கடந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் தொகுப்பாளினி அர்ச்சனா போட்டியாளராக வந்தது போல், இந்த முறை விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளை மிகவும் காமெடியாக தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான, பிரியங்கா கலந்து கொண்டுள்ளார். இவரை தொடர்ந்து 7 ஆவது போட்டியாளராக, பிரபல வாரிசு நடிகர் ஒருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

பிரியங்காவை பொறுத்தவரை, ஒரு தொகுப்பாளினியாக வாய்ப்பை பெற பல்வேறு கஷ்டங்களை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்தவர். தந்தையை இழந்த பின், இவரை மிகவும் தைரியமான பெண்ணாக வளர்த்தவர் பிரியங்காவின் அம்மா தான். கடந்து வந்த பாதைகள் குறித்த ஒரு சிறு அறிமுகத்திற்கு பின், பிக்பாஸ் சீசன் 5 வீட்டிற்குள் 6 ஆவது போட்டியாளராக, அதுவும் அர்ச்சனா போல் அலப்பறை செய்து கொண்டே பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார் பிரியங்கா.

பின்னர் பிக்பாஸ் வீடு முழுவதையும் சுற்றி பார்த்த, பிரியங்கா கிச்சன் சின்னதா இருக்கு, வீடு பெருசா இருக்கு என, வழக்கம் போல் தன்னுடைய பாணியில் கலகலப்பாக தன்னுடைய முதல் நாளை துவங்கியுள்ளார்... இவர் என்ட்ரி கொடுத்த பின்னர், பிக்பாஸ் கவினின் சூப்பர் டூப்பர் டான்ஸ் பிக்பாஸ் மேடையை அலங்கரித்தது.

பிரியங்காவின் என்ட்ரிக்கு பின்னர், தமிழ் சினிமாவின் லெஜெண்ட்ரி நடிகர் - நடிகையான ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரின் பேரன் அபிநய் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். ராமானுஜன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியும் என்கிற கனவோடு வந்துள்ளார்.

நடிப்பை தாண்டி விவசாயம், மாடுகள் வளர்ப்பது, ஆடுகள் வளர்ப்பது போன்றவற்றிலும் அதீத ஆர்வம் கொண்ட இவர், தனக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளதாக கூறினார். இவரை அறிமுகம் செய்த கமல், சாவித்திரியோடு நடித்த நினைவுகளை குறிப்பிட்டு நான் இவருக்கு மாமா முறை என்று கூறினார். முதல் முறையாக ஒரு போட்டியாளரை கமல், உறவு முறையோடு கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்றே கூறலாம்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என் திருமணக் கனவு அதுதான்: காதலர் சாந்தனுவுடன் வாழ்வு குறித்து மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!
விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!