நல்ல ரெஸ்பான்ஸ்... அதிகரிக்கப்படும் தியேட்டர்கள்! 'தூக்குதுரை' படத்திற்கு நன்றி கூறிய கொண்டாடிய படக்குழு!

By manimegalai aFirst Published Jan 28, 2024, 4:41 PM IST
Highlights

"தூக்குதுரை" படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட்  இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

ஜனவரி 25 ஆம் ஆண்டு கடும் போட்டிக்கு இடையே வெளியான திரைப்படம் 'தூக்குதுரை' இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கொடுத்து வெற்றி படமாக்கியதற்கு நன்றி தெரிவித்தனர். 

இந்த திரைப்படத்தை வாங்கி தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் வெளியிட்ட உத்திரா ப்ரொடக்ஷன்ஸ் கூறுகையில், நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகமாகிறது என்றும் வசூல் ரீதியாகவும் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்றும் கூறினார். மேலும் இதுபோன்று குடும்பமாக பார்க்கும் நல்ல திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் மென்மேலும் வரவேண்டும் என்றும் கூறினார். 

Latest Videos

படத்தின் தயாரிப்பாளர் அரவிந்த் வெள்ளை பாண்டியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் தூக்குதுரை திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறேன், இது போன்ற சின்ன திரைப்படங்களுக்கு இன்னும் நிறைய திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், இது குடும்பமாக பெண்கள் குழந்தைகளோடு சென்று திரையரங்கில் கண்டு களிக்க வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம், பார்வையாளர்களை கவரும் வகையிலும் ரசிக்கும் வகையிலும் ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்திருக்கிறேன் என்றும் அதற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அடைகிறேன் என்றார்.

மொத்தமாக படக்குழுவினர் தமிழகமெங்கும் திரையிட்ட இடங்களில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதையும், நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகரித்து வருவதையும், மக்கள் கூட்டமாக குடும்பத்தோடு சென்று திரையரங்கில் திரைப்படத்தை கண்டு ரசிப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறோம் என்று நன்றி கூட்டம் நடத்தி தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இந்த வாரம் வெளியான சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களே அதிகம் கவனிக்க பட்ட நிலையில், ரசிகர்களின் கவனத்தில் இந்த ஸ்மால் பட்ஜெட் படமான தூக்குதுரை படமும் பட்டு, நல்ல விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!