இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரபலம் இவரா? வெளியானது தகவல்!

Published : Aug 03, 2019, 03:46 PM IST
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரபலம் இவரா? வெளியானது தகவல்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம், வெளியேற்றப்படுவது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் தற்போது இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ள பிரபலங்களில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று, நடிகையும், மாடலுமான சாக்ஷி வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ்:

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே தமிழில் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி துவங்கப்பட்ட அன்று, 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அவர்களை தொடர்ந்து நிகழ்ச்சி துவங்கப்பட்ட மறுநாள், நடிகையும் , மாடலுமான மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

ரணகளமான பிக்பாஸ் வீடு:

16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, பிக்பாஸ் வீடு ரணகளமாக இருந்தது. குறிப்பாக வனிதா ஒரு பக்கம் சண்டை வாங்க, மற்றொரு புறம் அமைதியாக இருந்து ஒவ்வொரு பிரச்சனையாக செய்தார் அபி. மேலும் மீரா மிதுனம் அவருடைய பங்கிற்கு சண்டையால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் சேர்த்தார்.

காதல் பிரச்சனைகள்:

தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் ஒரு பக்கம் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் இருந்தாலும், மற்றொரு புறம் காதல் விஷயங்களும் பிக்பாஸ் வீட்டில் களைகட்டியது. கவினை காதலிப்பதாக அபிராமி முதலில் துவங்க, தற்போது அந்த லவ் பிரேக் அப் ஆகி முகேன் பக்கம் சென்றார். அவருடன் தன்னுடைய காதலை ஏற்று கொள்ளாததால் நட்பு என்கிற பெயரில் காதலர்கள் போல் பேசி வருகிறார்கள்.

கவின் காதல்:

அதே நேரத்தில், கவினிடம் தன்னுடைய மனதை பறிகொடுத்தார் சாக்ஷி,  பின் கவின் பார்வை லாஸ்லியா மீது திரும்பியதும், அதனை சாக்ஷியால் ஏற்று கொள்ள முடியாதல் பெரிய பிரச்சனையாக வெடித்தது.

வெளியேற்ற பட்ட போட்டியாளர்கள்:

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை, பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, ஆகிய பிரபலங்கள் வெளியேற்றப்பட்டுளா நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ள நபர் யார் என்பது முடிவு செய்வதில், ரசிகர்களுக்கே குழப்பமான மனநிலை உள்ளது.

இந்த வாரம் வெளியேற போவது இவரா?

இதுகுறித்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம், சாக்ஷியே வெளியேற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் நாளைய தினம் யார்? பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sivaji : நண்பனுக்காக சம்பளம் வாங்காம நடித்த சிவாஜி... தயாரிப்பாளர் கொடுத்த டிபன் கேரியரில் நடிகர் திலகத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி
Yezhu Kadal Yezhu Malai Review : ஏழு கடல் ஏழு மலை படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ