
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று தொகுப்பாளர் கமல், போட்டியாளர்களை கேள்வி, மேல் கேள்வி கேட்டு ஒரு வழி செய்துவிடுவார். எனவே இன்றைய தினம், போட்டியாளர்கள் ஒரு வித கலக்கத்துடன் இருந்தாலும், இதனை பார்க்கும் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் குஷியோ குஷி.
இன்றைய தினம் கண்டைப்பாக, கவினின் முக்கோண காதல் பிரச்சனை மீண்டும் பிக்பாஸ் வீட்டில் தலை தூக்கியது குறித்தும், சேரனை நேற்றைய தினம் சரவணன் மரியாதை குறைவாக பேசிய வார்த்தைகள் குறித்து கேள்வி மேல் கேள்வி எழுப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், மீசையை முழுமையாக எடுத்து விட்டு, புதிய கெட்டப்பில் என்ட்ரி கொடுத்துள்ளார் கமல்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ, "மாற்றம் ஒன்றே மாறாதது... என்கிற வசனத்துடன் ஆரம்பமாகிறது. குணங்கள் மாறலாம்... மனங்கள் மாறலாம்... இனி முக்கோண காதலுக்கு வழியே இல்லை. எல்லாம் நல்லவிதமாகவே இருக்கும் என பெட்டு கட்டி, தோத்துட்டேன்னு மீசையெல்லாம் எடுத்து விட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அது இல்லை காரணம். என அவரது நோக்கி கேள்விகள் எழும் முன்பே பதில் கொடுத்துள்ளார். அந்த மாற்றம் எதை நோக்கி நகர்கின்றன, இந்த மாற்றம் எதனால் நிகழ்ந்தது என்பதை, இன்று இரவு பார்க்கலாம் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.