ரஜினியின் தர்பாரோடு மோதத் தயாராகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’...

Published : Aug 03, 2019, 03:41 PM IST
ரஜினியின் தர்பாரோடு மோதத் தயாராகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’...

சுருக்கம்

ஏற்கனவே கைவசம் ஏழெட்டு படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு புதுமுக இயக்குநரோடு கைகோர்த்து ‘துக்ளக் தர்பார்’என்ற படத்தைத் துவக்கியிருக்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’படத்தோடு மோதும் என்று தெரிகிறது.  

ஏற்கனவே கைவசம் ஏழெட்டு படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு புதுமுக இயக்குநரோடு கைகோர்த்து ‘துக்ளக் தர்பார்’என்ற படத்தைத் துவக்கியிருக்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’படத்தோடு மோதும் என்று தெரிகிறது.

விஜய்சேதுபதி ,அதிதிராவ் ஹெய்தாரி  ரா.பார்த்திபன் கூட்டணியில் ‘துக்ளக் தர்பார்’தயார் ஆகிறது. ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும் கவர்ந்த கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.இப்படியொரு கூட்டணியை இணைத்து கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

மேலும் இப்படத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ஒருவர், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். மற்றொருவர் ’96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த கேமராக்காதலன் பிரேம்குமார். இவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர்.கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன். எடிட்டராக கோவிந்த் ராஜ் பணியாற்ற சண்டைப்பயிற்சியை திலீப் சுப்புராயன் கவனிக்கிறார்.

முழுக்க முழுக்க அரசியல் நையாண்டியாக உருவாகும் இப்படத்தை ரஜினியின் ‘தர்பார்’படத்தோடு சேர்த்து ரிலீஸ் செய்தால் விளம்பரச்செலவுகள் என்று எதுவுமே தேவைப்படாது என்று படக்குழு உறுதியாக நம்புகிறதாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!
அடேங்கப்பா... பராசக்தி படத்தின் ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?