இனி அவ்வளவு தான்! “பிக் பாஸ்” வீட்டில் பொய் சொல்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?

Asianet News Tamil  
Published : Jun 13, 2018, 03:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
 இனி அவ்வளவு தான்! “பிக் பாஸ்” வீட்டில் பொய் சொல்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?

சுருக்கம்

This time more punishment in big boss house

பிக் பாஸ்  சீசன் 1 ஐ விட இந்த ஆண்டும், மீண்டும் பிக் பாஸ் 2 “ஃபீவர்” பற்றத் தொடங்கிவிட்டது. “நல்லவர் யார், கெட்டவர் யார்” என்று கமல் மிரட்டும் தொனியில் வெளியாகியுள்ள புரொமோ, பிக் பாஸ் ரசிகர்களின் பல்ஸை எகிறவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு “பிக் பாஸ்” வீட்டின் செட், பூந்தமல்லியை அடுத்து “ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி”யில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதிகளும் அந்த வீட்டுக்குள்ளேயே இருக்கும். இந்தப் பிக் பாஸ் சீஸனிலும் அதே இடத்தில்தான் பிக்பாஸ் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில், 60-க்கும் மேற்பட்ட கேமராக்கள் கண்காணிக்கும் அந்த வீட்டுக்குள் ஒரு நாள் அதாவது 24 மநேரம் வசிக்க வரும் பத்திரிக்கையாளர்களுக்கு விஜய் டிவி-யின் அழைப்பு வந்தது.

கடந்த சீசனை காட்டிலும், இந்த சீசனில் வீட்டின் அமைப்பில் சின்னச் சின்ன மாற்றங்கள். நாம் பார்த்துப் பழகிய கன்ஃபஷன் ரூமின் கதவு சேர் டிசைனை மட்டும் மொத்தமாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால், கடந்த சீஸனில் இல்லாத ஒரு பயங்கர கான்செப்ட்தோடு களமிறங்கியுள்ளது பிக் பாஸ் டீம்.

அதாவது, பிக் பாஸ் வீட்டின் தோட்டத்துக்கு அருகே சிறை போன்ற ஒரு செட்டப் இருக்கிறது. சிறைக்குள் ஒரே ஒரு இரும்புக் கட்டில், வெளிச்சத்துக்கு ஒரு லைட். மெத்தை, போர்வை, ஏசி, ஃபேன் எதுவும் கிடையாது. அவ்வளவுதான் இனி பிக் பாஸ் வீட்டில் பொய் சொல்பவர்களுக்கும் வேலை செய்யாமல் தூங்குபவர்களுக்கும் “பிக் பாஸ்” சிறையில் அடைத்துப் பூட்டிவிடும் தண்டனை தருவார்கள் எப்படியோ இந்த நூறு நாட்களுக்கு செம்ம விருந்துதான் போங்க.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!