களவாணி-2ல் சூரிக்கு பதிலாக இவர் தான் காமெடியில் கலக்க போகிறாராம்…!

First Published Jun 13, 2018, 2:44 PM IST
Highlights
this comedian going to act in kalavani part 2


நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்தவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பே களவாணி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

கிராமியப் பின்னணியில் யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்த களவாணி திரைப்படம், நடிகர் விமல் மற்றும் ஓவியாவின் திரையுலக வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையை கொடுத்தது. இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பையும், விமலின் நடிப்பையும் யாராலும் மறந்திருக்க முடியாது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திலும் ஓவியா தான் விமலுக்கு ஜோடி.. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சற்குணம் தான், களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

தற்போது களவாணி 2 படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் வைத்து நடைபெற்றுவருகிறது. களவாணி படத்தின் முதல் பாகத்தில் சூரி தான் விமலுக்கு நண்பனாக நடித்திருந்தார்.

ஆனால் தற்போது சூரி வேறு சில படங்களில் கமிட்டாகி இருப்பதால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக அந்த காமெடி ரோலை, மீசைய முறுக்கு படம் மூலம் பிரபலமடைந்த ஆர்.ஜே.விக்னேஷ் நடிக்கவிருக்கிறார்.

click me!