
ஆஹா.... ட்ரம்ப்ப மறந்துட்டோமே...இதோ வரேன்...வெயிட் வெயிட்... இப்ப ஓகே வா பாருங்க....தமிழ் படம் 2.0 ...!
சிஎஸ் அமுதன் படத்தில் சிவா நடித்த தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் : தமிழ் படம் 2.0
இந்த படத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் அனைத்து அரசியல் தலைவர்களையும் வைத்து நல்லா வெச்சி செஞ்சி இருக்காங்கனு விமர்சனம் வர தொடங்கி விட்டது.
இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்து பெரும் வரவேற்பை பெற்று உள்ளது..
இந்த படத்தில் ஒபாமா முதல் ரஜினி கமல், அஜித், விஷால், விஜய் என அனைவரையும் கலாய்த்து உள்ளார் அந்த வரிசையில் டொனால்டு ட்ரம்ப்பையும் விட்டு வைக்கவில்லை...
கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கை கட்டி சேரில் அமர்ந்திருக்க ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அவரை பார்க்கும் புகைப்படம் வைரலானது என்ற விஷயம் நமக்கு தெரியும் தானே ...
அதே போன்ற காட்சியை இந்த படத்தில் வைத்து உள்ளனர். அது மட்டுமில்லாமல் நம்ம மீம்ஸ் கிரியேட்டர்கள் உலகப்புகழ் பெற்ற காமெடியான கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி சீனும் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு உள்ளனர்.
இந்த படத்தின் டீசரே பெரும் வரவேற்பை பெற்றுள்ள தருணத்தில் படம் முழுக்க எப்படியெல்லாம் காமெடி செய்து உள்ளார்களோ என்ற ஆவல் இப்போதே எழுந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.