கல்யாண வயசு பாடல் மீது உண்டான சர்ச்சை; அனிரூதா இப்படி செய்தார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்;

 
Published : May 21, 2018, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
கல்யாண வயசு பாடல் மீது உண்டான சர்ச்சை; அனிரூதா இப்படி செய்தார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்;

சுருக்கம்

this Tamil music directer a copy cat?

கோலமாவு கோகிலா திரைப்படம் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம். இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் ”எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சு” பாடல் வைரலாகி இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் அனிரூத் ரவிச்சந்திரன்.

தற்போது இந்த கல்யாண வயசு பாடல் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த பாடல் ஃபீலிங் மீ எனும் ஆங்கிலப்பாடலை தழுவி இருப்பதாக இணையத்தில் வரும் தகவலே அந்த சர்ச்சைக்கு காரணம்.

இதை அறிந்த ரசிகர்கள் அனிரூதா இப்படி செய்தார்? என அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஏற்கனவே தலைவா படத்தின் தீம் மியூசிக் பற்றி கூட இது போல ஒரு சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!