விபத்தில் சிக்கினாரா ஆர்யா..? பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்...!

 
Published : May 21, 2018, 11:23 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
விபத்தில் சிக்கினாரா ஆர்யா..? பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்...!

சுருக்கம்

arya met accident vairal photo in twitter

கடந்த சில மாதங்களாக 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சிக்காக பல பெண்களுடன் ஜாலியாக பொழுதை கழித்து வந்த ஆர்யா. தற்போது மீண்டும் தன்னுடைய பழைய பழக்க வழக்கங்களுக்கு திரும்பி வருகிறார். 

'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி முடிந்த பின் சில நாட்கள், பலரது விமர்சனத்திற்கு பயந்து வெளியே வராமல் இருந்த ஆர்யா. தற்போது நண்பர்களின் பட விழாக்கள், வெற்றி விழா, போன்றவற்றில் கலந்துக்கொள்ள துவங்கியுள்ளார்.

 

மேலும் ஷூட்டிங் இல்லாத நாட்களில், அவருக்கு மிகவும் பிடித்த சைக்கிள் ரெய்டு செய்யவும் துவங்கியுள்ளார். 

இந்நிலையில் ஆர்யா தன்னுடைய நண்பர்களுடன் 200 கிலோ மீட்டர் தூரம், சைக்கிள் ரெய்டு செய்துள்ளார். 200 கிலோமீட்டர் தாண்டிய பிறகு, என்ன ஆனது என தெரியவில்லை? சைக்கிள் ஒரு புறம் கிடப்பது போலவும் ஆர்யா ஒரு புறம் கிடப்பது போலவும் புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனால் ரசிகர்கள் பலர் பதறியபடி ஆர்யா விபத்தில் ஏதாவது சிக்கி விட்டாரா, என பல கேள்வி எழுப்பினர். பின்  இது ஜாலிக்காக இப்படி எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்தார்.

இதைதொடந்து ரசிகர்கள் சிலர் மீண்டும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தாதீர்கள் என சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது