டிவிட்டரில் வெளியான விசுவாசம் படக்கதை; இப்படி தான் நடந்திருக்கும் என வெளிவந்த தகவல்;

 
Published : May 21, 2018, 11:27 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
டிவிட்டரில் வெளியான விசுவாசம் படக்கதை; இப்படி தான் நடந்திருக்கும் என வெளிவந்த தகவல்;

சுருக்கம்

a story released in twitter about ultimate stars upcoming movie

அல்டிமேட் ஸ்டார் அஜீத், சிறுத்தை சிவா கூட்டணியில், விவேகம் படத்திற்கு பிறகு மாஸாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் விசுவாசம்.

அஜீத்தை புதிய தோற்றத்தில் காண வேண்டும் என்ற ஆவலில் இருந்த அவரது ரசிகர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ,இந்த திரைப்படத்தில் அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒன்றில் புதிய தோற்றத்தில் அசத்தப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகியிருந்தது.

தற்போது ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றும்வரும் இந்த திரைப்படத்தின் படப்பின் போது,  குழந்தைகளுடன் அஜீத் எடுத்துக்கொண்ட க்யூட்  புகைப்படங்கள் , ஒரு பக்கம் ஹிட்டாகிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தருணத்தில் இது தான் விசுவாசம் திரைப்படத்தின் கதை, என இணையத்தில் ஒரு கதை உலா வருகிறது. அதன் படி அஜீத் இதில் அண்ணன் தம்பி என இரு வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும். ஜெயிலில் இருக்கும் அண்ணன் அஜீத், தனது கிராமத்திலி இருக்கும் தம்பியை பார்க்க வருவதாகவும், அப்போது தம்பி கொலை செய்யப்பட, அதற்கு காரணமானவர்களை அஜீத் பழிவாங்குவதாகவும், இந்த கதை இருக்கிறது.

 மேலும் நியூட்ரினோ குறித்தும் இந்த கதையில் கூறப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து தங்கள் கருத்துக்களை கூறியிருக்கும் ரசிகர்கள் ”சமீபத்தில் கூட திருவிழா போன்ற செட்டில் வைத்து பிரம்மாண்டமாக பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. தொடர்ந்து வரும் விசுவாசம் படம் தொடர்பான அப்டேட்டுகளை வைத்து, யாரோ உருவாக்கிய கற்பனைக்கதையாகக் கூட இது இருக்கலாம். என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது