தளபதி 62ல் விஜய் லுக் இப்படி தான் இருக்கப் போகிறதாம்;

Asianet News Tamil  
Published : Jun 14, 2018, 02:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
தளபதி 62ல் விஜய் லுக் இப்படி தான் இருக்கப் போகிறதாம்;

சுருக்கம்

this look of vijay going to set new trend

மெர்சல் திரைப்படத்தின் கலக்கலான வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய் நடித்து கொண்டிருக்கும் அடுத்த படம் ”தளபதி 62”. விஜயை வைத்து கத்தி, துப்பாக்கி போன்ற ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தான், இந்த திரைப்படத்தினை இயக்கிவருகிறார். கத்தி திரைப்படத்தில் விவசாயிகளை மையப்படுத்தி கதையை கொண்டு சென்றது போல, தளபதி 62 படத்திலும் சமுதாயத்திற்கு கருத்து சொல்லும் விதமாகவே, பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் தளபதி62 திரைப்படம் அரசியல் சார்ந்த ஒரு படம் என்பதை ஏ.ஆர்.முருகதாஸே தெரிவித்திருக்கிறார். அதே போல இந்த திரைப்படத்தில் தமிழகத்தில் சமீபகாலமாக நடைபெற்றுவரும், அரசியல் மாற்றங்கள் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதை, தளபதி 62 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவு படுத்தி இருக்கின்றன.

அரசியல் சார்ந்த படம் என்பதால் தளபதி 62-ல் விஜய்-ன் கெட்டப் எப்படி இருக்கும்? என தெரிந்துகொள்ள விஜய் ரசிகர்கள் பேராவலுடன் இருக்கின்றனர். அந்த ஆவலை அதிகப்படுத்தும் விதமாக சில தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

அதன் படி தளபதி62-ல் விஜய் மிகவும் ஸ்டைலிஷான கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். அதில் ஹைலைட் அவர் அணிந்திருக்கும் கடுக்கன் தானாம். ”தளபதி 62” ஃபர்ஸ்ட் லுக் வந்த பிறகு இளைஞர்கள் மத்தியில், விஜயின் லுக் தான் ட்ரெண்ட் ஆக போகிறது. என்றும் கூறி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ethirneechal Thodargiradhu: ஜனனிக்கு விழுந்த பேரிடி! ஆதி குணசேகரனின் கொடூர திட்டம் பலித்ததா? எதிர் நீச்சல் தொடர்கிறது சீரியல் சீக்ரெட்.!
Draupathi 2: விறுவிறுப்பான திரைக்கதை.. அதிரடி வசூல்! இரண்டு நாட்களில் திரௌபதி 2 செய்த தரமான சம்பவம்!