
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தமிழக மக்களை அந்த பக்கம், இந்த பக்கம் திரும்ப விடாமல் கட்டிப்போட்டு, டிஆர்பி-ஐ எகிற செய்த, ஒரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் ஞாயிறு அன்று தொடங்க உள்ளது. சென்ற முறை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய, கமல் தான் இம்முறையும் பிக்பாஸை தொகுத்து வழங்க போகிறார்.
சென்ற முறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியாவை வறுத்தெடுத்த காயத்திரி ரகுராமை, ஓவியா ரசிகர்களும், பொதுமக்களும் எக்கச்சக்கமாக திட்டி தீர்த்தனர். இதனால் நொந்து போன காயத்திரி, பிக் பாஸ் மீது கடும் கோபத்தில் இருந்தார்.
இப்போது அந்த பிரச்சனைகளை விட்டு அவரும் வெளி வந்துவிட்டார். மக்களும் அவரை விட்டு விட்டனர். சமீபத்தில் ஒரு பேட்டியின் போது பேசிய காயத்திரி, கமலஹாசன் குறித்து ஒரு உண்மையை வெளியிட்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு பக்கபலமாக இருப்பதாக கமல் அப்போது வாக்கு கொடுத்ததாகவும், இப்போது அந்த வாக்கை அவர் தவறிவிட்டதாகவும் அதில் கூறி இருக்கிறார் காயத்திரி.
மேலும் அவர் இப்படி கொடுத்த வாக்கை காப்பாற்றாமல், இப்போதே ஒர் அரசியல்வாதி போல நடந்து கொண்டார் கமல். என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்ற போதே காயத்திரி விஷயத்தில் கமல் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார், என்று மக்க்ள் சந்தேகப்பட்டனர். அந்த சந்தேகத்தை இப்போது காயத்திரி அளித்திருக்கும் இந்த பேட்டி தெளிவுபடுத்திவிட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.