
நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் நடிகர், நடிகைகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்காகவும், அவ்வப்போது அரசியல் நோக்கத்தில் மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் மீது பாலியல் குற்றங்களை அடுக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டியை எச்சரித்துள்ளார் நடிகர் விஷால்.
அண்மையில் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து, பல முன்னணி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தெலுங்கு சினிமாவையே பரபரப்பாக்கினார். இவருக்கு எதிராக செயல்பட்டு சிலர் இவரை தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இதற்கு ஸ்ரீரெட்டி காரணம் கேட்ட போது தகுந்த காரணம் கூறாததால், தெலுங்கு பிலிம் சேம்பர் முன்பு தன்னுடைய ஆடைகளை கலைத்து அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் அண்மையில் இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும், நானி மீது பாலியல் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஸ்ரீரெட்டி நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது.
பின் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நடிகர் நானி மீது ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியது மட்டும் இன்றி விரைவில் சில விசயங்களை வெளியிடுவேன் என மிரட்டியிருந்தார்.
இந்நிலையில் விஷால் ஸ்ரீரெட்டியில் குற்றச்சாட்டு கொடூரமானது. நானியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஸ்ரீரெட்டி இந்த பெயர் விளையாட்டை நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.