அஜித் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன..? வெளியான தகவல்...!

Asianet News Tamil  
Published : Jun 14, 2018, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
அஜித் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன..? வெளியான தகவல்...!

சுருக்கம்

why nayanthara accepted ajith visuvasam movie

அஜித்தை வைத்து இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' திரைப்படத்தில் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கைகோர்த்துள்ளார் நடிகர் அஜித். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

சமீப காலமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களை தவிர்த்து, கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, 'விசுவாசம்' படத்தில் கதையை கேட்காமலேயே ஓகே சொல்லி விட்டாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? என்பது குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்கிற யோசனையோடு, படக்குழுவினர் அவரை அணுகியபோது, அவர் இந்த படத்தின் கதை என்ன? அதில் தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதா? என எதுவுமே கேட்கவில்லையாம். இது படக்குழுவினருக்கு ஆச்சர்யத்தை தந்தது. அது மட்டும்மின்றி நீங்கள் கேட்கும் தேதியை அட்ஜெஸ்ட் செய்து தருவதாகவும் கூறினாராம். 

மேலும் எப்போதும் சம்பள விஷயத்தில் கறாராக பேசும் நயன் சம்பளத்தை பற்றி ஒரு வார்த்தை கூட படகுழுவிடம் பேசவில்லையாம். 

நயன்தாரா இப்படி நடந்துக்கொள்ள காரணம், அஜித் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நயன்தாரா அஜித்துடன் 'பில்லா', 'ஏகன்', மற்றும் 'ஆரம்பம்' ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் நடிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!