தனது 45 ஆண்டு அனுபவத்தில் இதுவே முதல் முறை.! இளையராஜா சொன்ன வார்த்தை? பூரித்து போய் கையெடுத்து கும்பிட்ட சூரி!

By manimegalai a  |  First Published Apr 1, 2023, 7:18 PM IST

நடிகர் சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம், 'விடுதலை'. இப்படம் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்டு சூரி, இளையராஜா மற்றும் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ... 
 


இரண்டு பாகமாக உருவாகியுள்ள, 'விடுதலை' படத்தின் முதல் பாகம் நேற்று வெளியான நிலையில்... இப்படத்தின் புரோமோஷன் பணிக்காக, நாயகன் சூரி, குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், தக்‌ஷாசீலா என்கிற தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி, மிர்ஜி சிவா, அம்மு அபிராமி, பாபா பிளாக்‌ஷிப் படக்குழுவினர் நடிகர் கவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், கல்லூரி சேர்மன் பி.ஸ்ரீராம் உள்ளிட்ட பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். அதே போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை கல்லூரியை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்பு மேடைக்கு வந்து பேசிய நடிகர் சூரி, படத்தின் அனுபவம் மற்றும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Tap to resize

Latest Videos

மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் கீழடிக்கு விசிட் அடித்த சூர்யா! வாயே திறக்காமல் சர்ச்சைக்கு பதில் கொடுத்த ந

படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு குறித்து நடிகர் சூரி கூறுகையில், 'வெண்ணிலா கபடிக்குழு' படம் வெளியாகும் போது , எப்படி பட்ட பதட்டமான உணர்வு இருந்ததோ... அதே போன்ற உணர்வு தான் இப்படத்தின் ரிலீஸின் போதும் உள்ளது. கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புவதாக கூறினார். மேலும் இதுவரை ஒரு காமெடியனாக விஜய், அஜித், சூப்பர் ஸ்டார் என அனைவருடனும் நடித்துள்ளேன். அவர்கள் நடிப்பை ரசிகர்கள் பாராட்டும் போது அந்த பாராட்டு எனக்கும் வந்தது. ஆனால் இப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதால் பொறுப்புகள் கூடியதை உணர்ந்தேன்.

தொடர்ந்து பேசிய சூரி, இப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா குறித்து எழுபட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில், முதல் முதலாக இசைஞானி 'விடுதலை' படத்திற்கு தான் இசையமைத்தார். அப்போது நான், வெற்றிமாறன், மற்றும் இளையராஜா ஆகியோர் ஸ்டுடியோவில் அமர்ந்திருந்தோம். இளையராஜா ஒரு நிமிடம் என்னையே பார்த்து கொண்டிருந்தார். நான் மிகவும் பதட்டத்துடன் கீழே குடிந்தபடி இருந்தேன்.  அப்போது என்னை பார்த்து, தனது 45 ஆண்டு அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்து கொண்டு tune போடுவது இது தான் முதல்முறை என இளையராஜா கூறியதாக சூரி பூரித்தபடி கூறியுள்ளார்.

கதாநாயகனாக வெற்றி கண்ட சூரி..! விடுதலை படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

மேலும் தன்னுடைய சிக்ஸ் பேக் உடலமைப்புக்கு காரணம், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் கொடுத்த ஊக்கம் தான் காரணம் என்றும், 'சீமராஜா' படத்தில் சிக்ஸ் பேக் வைத்த கதையை கூறினார். பின்னர் விடுதலை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் குறித்து பேசுகையில்... விஜய் சேதுபதி பலமுறை தன்னை காமெடி ரோல்ஸை தாண்டி, கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடிக்க சொல்வர். ஆனால் அது போன்ற வாய்ப்புகளை நான் கேட்டு பெற்றதே இல்லை. ஆனால் இப்போது நான் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் படத்தில், விஜய் சேதுபதியே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் என்னை இந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்த வெற்றிமாறனுக்கு, விஜய் சேதுபதி நன்றி கூறினார். விடுதலை படத்திற்கு பின்னர், விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் எனா தெரிவித்தார்.  இறுதியாக, சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி மாணவர்களை பார்த்து, நன்றாக படித்து நமது மண்ணில் வேலை பார்க்க வேண்டும். பெற்றோர்களை சிறப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். குறிப்பாக மாணவர்கள் மொபைல் போன்களை தேவைக்கும் கவனத்துடனும் பயன்படுத்த வேண்டும் என கூறி விடைபெற்றார்.

click me!