'கடைசி விவசாயி' படத்திற்கு பின்னர் மீண்டும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி!

By manimegalai a  |  First Published Mar 31, 2023, 9:44 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில்,  இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார். ஏற்கனவே மணிகண்டன் 'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' போன்ற தரமான படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வெளியான படங்கள், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட,  படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே, விஜய் சேர்த்துபதியை வைத்து மணிகண்டன், கடைசி விவசாயி படத்தை இயக்கிய நிலையில், இதை தொடர்ந்து இருவரும் வெப் சீரிஸ் மூலம் மீண்டும் இணைய உள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து... பாடகர் விஜய் ஜேசுதாசின் வீட்டில் நகை திருட்டு! பரபரப்பு புகார்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இந்தி வெப் சீரீஸில் ஏற்கனவே நடித்துள்ள நிலையில், தமிழில்  வெப் சீரிஸில் நடிப்பது இதுவே முதல் முறை.  இந்த புதிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 7C’s Entertainment Pvt Ltd (P ArumugaKumar) தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

முதல் நாளே இத்தனை கோடி வசூலா? 'தசரா' படத்தின் தரமான சம்பவம்..! சந்தோஷத்தில் படக்குழு..!

B அஜித் குமார் படத்தின் எடிட்டராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். வெப் சீரிஸின் ஒலி வடிவமைப்பை அஜயன் K அடாத் மற்றும் ஆடை வடிவமைப்பை கவிதா கையாள்கின்றனர். இந்த வெப் சீரிஸில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகள் வயது நடிகையை மடக்கி போட்ட டாப் ஹீரோ! ரகசிய உறவுக்கு இதுவே ஆதாரம்? புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்

click me!