
சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் நேற்று சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த திரைப்படத்தைக் காண நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் டிக்கெட் எடுத்து தங்கள் குழந்தைகளுடன் படம் பார்க்க வந்துள்ளனர். ஆனால் அவர்களை அங்குள்ள ஊழியர்கள் படம் பார்க்க அனுமதிக்கவில்லை. இதைப் பார்த்தது அங்கிருந்தவர்கள் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டதோடு, அவர்களுக்காக வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து வேறுவழியின்றி அவர்களை படம் பார்க்க அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து ரோகினி திரையரங்க நிர்வாகம் மீதும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டனக் குரல்கள் எழுந்தன. இதன்பின் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த தியேட்டர் நிர்வாகம், பத்து தல யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதாலும் அவர்கள் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்ததாலும், அவர்களை அனுமதிக்கவில்லை என தெரிவித்திருந்தனர். ரோகினி தியேட்டர் நிர்வாகத்தின் இந்த மழுப்பலான பதிலை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.
இதையும் படியுங்கள்... முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின்.. ரோகிணி திரையரங்க விவகாரம் பற்றி ஆதங்கப்பட்ட விஜய் சேதுபதி!
இதையடுத்து நரிக்குறவர் குடும்பத்தை படம் பார்க்க அனுமதிக்காமல் இருந்த 2 ஊழியர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரோகினி தியேட்டரில் நடந்த இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியிலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது இயக்குனர் வெற்றிமாறனும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : “நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என தனது தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு மூலம் பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்... நரிக்குறவ சமுதாயத்தினரை திரையரங்கம் உள்ளே அனுமதிக்காத ரோகினி தியேட்டர் ஊழியர் மீது வழக்கு பதிவு!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.