Naai Sekar Movie: 'நாய் சேகர்' படத்தில் நாய்க்கு குரல் கொடுத்தது பிரபல ஹீரோ... யார் தெரியுமா?

Published : Jan 03, 2022, 09:04 AM ISTUpdated : Jan 03, 2022, 09:05 AM IST
Naai Sekar Movie: 'நாய் சேகர்' படத்தில் நாய்க்கு குரல் கொடுத்தது பிரபல ஹீரோ... யார் தெரியுமா?

சுருக்கம்

நடிகர் சதீஷ் (Sathish) நடித்து வரும் 'நாய் சேகர்' (Naai sekar movie) படத்தில், நடித்துள்ள நாய்க்கு பிரபல ஹீரோ நடிகர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.  

நடிகர் சதீஷ் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தில், நடித்துள்ள நாய்க்கு பிரபல ஹீரோ நடிகர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

வைகை புயல் வடிவேலு சுராஜ், இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பெயர் 'நாய் சேகர்' என்று கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு தகவல், உலா வந்தாலும் இதனை படக்குழுவினர் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இருந்ததால், இந்த தலைப்பு சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் படத்திற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம்  கைப்பற்றியது. காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்குய இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என எண்ணி படக்குழுவினர் இந்த தலைப்பை முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்: Priyanka Chopra: கடலுக்கு நடுவே... படு ஹாட் உடையில் கணவருடன் நியூ இயர் கொண்டாடிய பிரியங்கா சோப்ரா! போட்டோஸ்!

 

எனவே வடிவேலு நடிக்கும் படத்திற்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்று தலைப்பு மாற்றப்பட்டதால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்தது. வடிவேலு நடிக்கும் படத்திலும் நாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: Valimai Movie: ஆரம்பமே அசத்தல்! அஜித்துக்கு 120 அடி பேனர் வைத்து வலிமையை வரவேற்ற ரசிகர்கள்! வைரல் வீடியோ!

அதே போல் சதீஷ் நடிக்கும் படத்திலும் ஒரு நாயை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கிஷோர் ராக்குமார் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில்... குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி சதீஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜார்ஜ் மரியான், லிவிங்ஸ்டன், இளவரசு, ஞானசம்பந்தன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, அஜேஷ் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய்க்கு, பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சிவா தான் குரல் கொடுத்துள்ளாராம். இந்த தகவலை இந்த படத்தின் ஹீரோவும், காமெடி நடிகருமான சதீஷ் தன்னுடைய நன்றியை கூறி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!