கேப்டன் மீண்டும் நடிக்கிறாராம்? ரஜினியை இயக்க விருப்பமில்லையாம்? கோலிவுட் கோக்குமாக்குகள்..!

Published : Jan 03, 2022, 07:21 AM IST
கேப்டன் மீண்டும் நடிக்கிறாராம்? ரஜினியை இயக்க விருப்பமில்லையாம்? கோலிவுட் கோக்குமாக்குகள்..!

சுருக்கம்

"எங்கேருந்துதான் இப்படில்லாம் கெளப்புறதுக்குன்னே வருவாய்ங்கன்னு தெர்ல. அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில எனக்கும் ரிவிட் வைக்கிறாய்ங்க"

சினிமாவின் அடிப்படையே கற்பனை தான். எந்தெந்த அளவுக்கு புதுசு புதுசா கற்பனை பண்ணி கதையும், களமும், ஸீன்ஸும் அமைக்கிறாங்களோ அந்தளவுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

சினிமாக்காரங்களைப் பற்றியும் ரெகுலராய் கற்பனையாக விஷயங்கள் றெக்கை விரிக்கும். இதை தங்களுக்கான பப்ளிசிட்டியாக எடுத்துக் கொண்டு, கெத்தாக வலம் வருவார்கள் நடிகர், நடிகைகள். ஆனால் சில நேரங்களில், கற்பனையாக கிளம்பிய விவகாரங்கள், சம்பந்தப்பட்ட செலிபிரெட்டியின் கேரியரையே காலி பண்ணிவிடும். அல்லது றெக்கை கட்டிய அந்த செய்தி அசிங்கப்பட்டுவிடும்.

அப்படித்தான் சமீபத்தில் மூன்று கற்பனை செய்திகள் கன்னாபின்னான்னு கதறல்களை உருவாக்கியுள்ளன தமிழ் சினிமாவில்….

  • பிரேமம்! எனும் மரணமாஸ் மலையாள படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், அப்பட வெற்றிக்குப் பின்ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கும் எண்ணமேயில்லைஎன்று சொன்னதாக ஒரு தகவல் தட தடத்தது. ஆனால், சமீபத்தில் இது பற்றி ஒரு பதிவை தந்திருக்கும் அல்போன்ஸ்யாரோ ஒருவர் கிளப்பிய வதந்தி அது. செளந்தர்யா உடனே அது உண்மையா? என எனக்கு மெசேஜில் கேட்டார். உண்மையில் சாருக்காக ஒரு கதை தயார் செய்து வைத்திருந்தேன். அவரை இயக்கும் ஆசை உள்ளது.’ என்கிறார்

  • விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக சமீபத்தில் ஒரு செய்தி பரவியது. அதற்கான பயிற்சி மற்றும் ஒப்பனைகளில் அவர் இறங்கியுள்ளதாகவும் எழுதினார்கள். ஆனால் அவரது குடும்பத்தினரோஅது தவறான தகவல்.’ என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஆனாலும் கூட, விஜய் ஆண்டனி நடிக்க, விஜய் மில்டன் இயக்கும்மழை பிடிக்காத மனிதன்படத்தில் கெஸ்ட் ரோலில் கேப்டன் நடிக்க இருக்கிறார், அவர் வீட்டிலேயே அக்காட்சிகளை ஷூட் செய்ய உள்ளனர்! என தொடர்ந்து கொளுத்திப் போடுகின்றனர்.

  • நடிகர் சூரி! வெற்றிமாறன் இயக்கும்விடுதலைபடத்தில், கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், ‘இனி நான் காமெடி ரோல் பண்ண மாட்டேன்என்று தன்னை அணுகும் இயக்குநர்களிடம் அவர் சொல்லுவதாக ஒரு தகவல் பரவியது. அவரது நண்பர்கள் இது பற்றி அவரிடம் கேட்க, சூரியோஎங்கேருந்துதான் இப்படில்லாம் கெளப்புறதுக்குன்னே வருவாய்ங்கன்னு தெர்ல. அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில எனக்கும் ரிவிட் வைக்கிறாய்ங்க பாருங்க. காட் பிராமிஸா எனக்கு அப்படியெல்லாம் ஒரு எண்ணமே இல்ல மாப்ஸு, காமெடியா விட்டா நான் காலியாகிடுவேன்னு எனக்கு தெரியாதா?’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!