
சமீபகாலமாக வெளியாகி இருக்கும் பெரும்பாலானா திரைப்படங்களில், காமெடியில் கலக்கி இருப்பவர் யோகி பாபு. நயன்தாரா நடித்திருக்கும் ”கோலமாவு கோகிலா” படத்தில் வரும் “எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சு டீ” பாடல் மூலம் இப்போது இவர் பெரிய அளவிலான புகழை அடைந்திருக்கிறார்.
அந்த பாடலில் இவரது நகைச்சுவையான நடிப்பிற்கு, பல்வேறு பிரபலங்களும் யோகி பாபுவை பாராட்டி இருக்கின்றனர். தற்போது வெளியாகி இருந்த காளி, செம போன்ற படங்களில் கூட யோகி பாபுவின் நடிப்பினை தான் படத்தின் ப்ளஸ் என, விமர்சகர்கள் குறிப்பிட்டு பேசுகின்றனர்.
இன்று திரைத்துறையில் இந்த அளவு உயர்ந்திருந்தாலும், ஒரு காலத்தில் பட வாய்ப்புக்காக மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் யோகி பாபு. சினிமாவிற்கு வரும் முன் அவர் லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலாவுடன் பணியாற்றியிருக்கிறார்.
உதவி இயக்குனராக யோகி முயற்சி செய்தபோது, உனக்கு காமெடி ஃபேஸ் நீ அதுல எதாவது ட்ரை பண்ணு என கூறியிருக்கிறார் ராம் பாலா. அப்போது மறைந்த காமெடி நடிகை ஷோபனா, ஏன் அப்படி அவரை கிண்டல் பண்ணறீங்க? அவர் ஒரு நாள் பெரிய ஆளா வரப்போறார். அவர்கால்ஷீட் கிடைக்காம நீங்க திண்டாடப்போறீங்க என கூறியிருக்கிறார். அன்று அவர் கூறியது இன்று பலித்துவிட்டது. ஆனால் அவர்தான் அதை பார்க்க உயிருடன் இல்லை. என கூறி வருந்தியிருக்கிறார் யோகி பாபு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.