
விஜய் குழுமம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்திவருகிறது. இந்த ஆண்டு பத்தாவது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த விருது வழங்கும் நிகழ்வை தற்போது ஒத்துவைத்திருக்கிறது. இதற்கு காரணம் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டு சம்பவம் தான் என ஒரு தகவல் பரவியது.
தமிழருக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த அநீதிக்கு மத்தியில் நிகழ்ச்சியை நாம் நடத்த வேண்டாம். என விஜய் அவார்ட்ஸ் குழு முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவல் அதற்கு முற்றிலும் வேறாக இருக்கிறது.
அவர்கள் தொடர்ந்து விழாவை நடத்த தான் முயன்றனர். ஆனால் பல பிரபலங்கள் இந்த தூத்துக்குடி சோக சம்பவத்தை நினைத்து வருத்தத்தில் இருப்பதால், தாங்கள் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள விரும்பவில்லை என தெரிவித்திருக்கின்றனர்.
இதன் காரணமாகவே நிகழ்ச்சியை ஒத்திவைத்திருக்கிறது விஜய் குழுமம் என கூறுகிறது அந்த புதிய தகவல். அதானே பார்த்தோம், அவ்வளவு களேபரத்துக்கு நடுவிலும் காலா இசைவெலியீட்டு விழாவை ஒளிபரப்பிக்கொண்டிருந்த விஜய் டிவியா? இவ்வளவு பொறுப்பா செயல்பட்டுச்சுனு நினைச்சோம், இப்ப தெரியுது உண்மை என்னனு என இத்தகவலால் கடுப்பாகி இருக்கின்றனர் மக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.