
நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 திரைப்படத்தில் நடித்துவருகிறது. அவரும் பிரபல நடிகை சங்கீதாவும் குடும்ப நண்பர்கள். சமீபத்தில் ஒரு பேட்டியின் போது விஜய் பற்றி தன்னுடைய சிறுவயது நியாபகங்களை பகிர்ந்திருக்கிறார் சங்கீதா.
சிறு வயது முதலே எனக்கு விஜயை நன்கு தெரியும்.எனது தாத்தாவின் தயாரிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கிள் பணிபுரிந்திருக்கிறார். இதனால் நாங்கள் அப்போதே குடும்ப நண்பர்கள் தான்.
என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நபர் விஜய். விஜயுடன் ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் நான் தான் நடிக்கவிருந்தேன். என் அம்மாவும் அதைதான் மிகவும் விரும்பினார் ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதன் பிறகு ஒரு முறை பொது நிகழ்ச்சியில் எனது நடனத்தை பார்த்துவிட்டு மனமாற பாராட்டினார் விஜய்.
என்னிடம் யாரையும் காதலித்து தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாதே, என பலமுறை எச்சரித்திருக்கிறார். என்னை பற்றிய கிசு கிசு ஏதாவது பத்திரிக்கையில் வந்தால் என்னிடமே அதை பற்றி கேட்டு தெளிவுபடுத்திக்கொள்வார்.
என் வாழ்க்கை மீது மிகுந்த அக்கறை கொண்டவர் விஜய். நான் கிரிஷ்-ஐ காதலித்த போது கூட விஜயிடம் தான் அழைத்து சென்றேன். அவருடன் பேசிய பிறகு உனக்கு ஏற்ற துணைதான் இவர் என கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார் விஜய். கிரிஷ்-ன் நிஜப்பெயர் கூட விஜய் தான். எப்படி விஜய் சங்கீதா ஜோடியோ, அதே போல எங்களுடையதும் விஜய் சங்கீதா ஜோடி தான் இதுவும் தற்செயலாக நடந்திருக்கிறது. என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகை சங்கீதா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.