பாக்யராஜுக்கு எதிராக திரும்பிய நாடக நடிகர்கள்! ஓட்டு கேட்டு வந்தா விரட்டி அடிப்போம்!

By manimegalai aFirst Published Jun 11, 2019, 7:39 PM IST
Highlights

ஜூன் 23ஆம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் விஷாலின் பாண்டவர் அணிக்கும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஜூன் 23ஆம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் விஷாலின் பாண்டவர் அணிக்கும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணியை சேர்ந்தவர்களும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகர் சங்கத்தில், நாடக நடிகர், நடிகைகளின் வாக்குகள் அதிகம் இருப்பதால் அவர்களின் வாக்குகளை பெற இரு அணியினர்களும் தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் நாடக நடிகர்களை அவமதிப்பது போல் சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவர், பாக்யராஜ் பேசியுள்ளதாக கூறி நாடக நடிகர் ஒருவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதில் அவர் கூறியிருப்பதாவது: "பாக்யராஜ் சமீபத்தில் நாடக நடிகர்களிடையே பேசியபோது, ஓட்டு கேட்க வரும்போது ஏழ்மையில் இருக்கும் நாடக நடிகர்களுக்கு ஓரளவு பண உதவி செய்வோம் என்றும் அதன்பின்னர் வெற்றி பெற்று பதவியேற்றவுடன் நாடக நடிகர்களுக்கு பல உதவிகள் செய்வோம் என்று பேசியுள்ளார். நாடக நடிகர்கள் ஓட்டுக்கு காசு வாங்கும் பிச்சைக்காரர் என பாக்யராஜ் கருதி இவ்வாறு பேசியுள்ளார். அவர்தான் எங்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்டு வருகிறார்.

நாடக நடிகர்களை இழிவாக பேசிய பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டி அடிப்போம். அவருக்கு நாடக நடிகர்கள் யாரும் ஓட்டு போடக்கூடாது. அவ்வாறு ஓட்டு போட்டால் அது நாடகத்துறைக்கே செய்யும் துரோகம்' என்று அந்த நாடக கலைஞர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
 

click me!