
அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் முதல் சிங்கிள் டிராக்கின் டீசரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தன்னுடைய 57-வது படமான விவேகம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் கிட்டதட்ட ரூ.90 கோடி செலவில் தயாரித்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளில் அஜித் பிஸியாக இருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் பாடல்களை பிரபல ஆடியோ நிறுவனமான சோனி கைப்பற்றியுள்ளது.
இப்படத்தின் இரவு-பகல் பாராமல் 50 தீம் மியூஸிக் உருவாக்கி அஜீத்திடம் கொடுத்தாராம் இசையமைப்பாளர் அனிருத்.
இதில் எந்த தீமை தேர்ந்தெடுப்பது என்று அஜீத்தே திணறிய நிலையில், கடைசியாக ஒன்றை தேர்ந்தெடுந்துள்ளார்.
அந்த தீம் மியூஸிக் வரும் 19-ஆம் தேதி சிங்கிள் டிராக்காக வெளிவரயிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அனிருத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு அதன் சிங்கிள் டீசரை வெளியிட்டுள்ளார்.
அது சர்வைவா! சர்வைவா! சர்வைவா! என்ற தீம் மியூசிக் கொண்ட சிங்கிள் டிராக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.