தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோயின்!

 
Published : Jun 14, 2017, 04:29 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோயின்!

சுருக்கம்

New heroin entry in tamil cinema

ஷிவானி. இவர் 'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மகள்!

அவரிடம் ஒரு மினி இன்டர்வியூ

"அப்பாவும் அம்மாவும் சினிமா ஃபீல்டை சேர்ந்தவங்க அப்டிங்கிறதால என்னோட ஸ்கூல் டேஸிலிருந்தே சினிமா பத்தின, நடிப்பு பத்தின அறிமுகம் உண்டு.

கூடவே, சின்ன வயசிலிருந்தே பரதநாட்டியம், குச்சிபிடியெல்லாம் முறைப்படி கத்துக்க ஆரம்பிச்சேன். மியூஸிக்லேயும் ஆர்வம் அதிகம்!

வீணை, கீ போர்ட், கிடார்லாம் நல்லா வாசிப்பேன்.

நானும் என் தங்கை ஷிவாத்மிகாவும் 'யூ டியுப்' பார்த்து ஏதாச்சும் பாடிக்கிட்டே இருப்போம்.

எங்க ரெண்டு பேரோட பெரிய ஹாபின்னா அது பாடுறதுதான்!" என தன்னைப் பற்றி இன்ட்ரோ கொடுக்கும் ஷிவானி தங்கையோடு சேர்ந்து 'கிக் பாக்ஸிங்'கும் கற்று வருகிறாராம்!

''கலையுலக வாரிசுங்கிறதால நடிப்பு, இசையார்வம்லாம் சரி. 'கிக் பாக்ஸிங்' ஆர்வம் எப்படி வந்துச்சு?" என்று கேட்டால்,

"நான் ஒரு பிட்னஸ் அடிக்டுங்க" என ஒற்றை வரியில் பதில் தருகிறார்.

ஜீவிதா பிறந்தது மட்டும்தான் தமிழ்நாடு. வளர்ந்தெல்லாம் ஹைதராபாத்தில். என்றாலும் நன்றாக தமிழ் பேச வருகிறது ஜீவிதாவுக்கு.

அது பற்றி கேட்டால், "எங்க ரிலேஷன்ஸ் நிறையப் பேர் சென்னையில் தான் இருக்காங்க. அவங்களோட தமிழ்லதான் பேசுவோம். அதுதான் காரணம்" என்கிற ஷிவானி இப்போது 3வது ஆண்டு மருத்துவம் படித்து  வருகிறார்.

நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பாராம். தனுஷை மிகவும் பிடித்த ஹீரோ என சொல்வதோடு '3' படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து அழுதேன் என்றும் போனஸ் தகவல் தருகிறார்.

"தனுஷை தவிர யாரை பிடிக்கும்" என்பது நம் அடுத்த கேள்வி.

"விஷாலையும் ரொம்ப பிடிக்கும் மேன்லியா இருப்பார். அவர் எங்க ஃபேமிலி ஃபிரெண்டும்கூடவிஜய் சேதுபதியையும் பிடிக்கும். எத்தனை ஹீரோ இருந்தாலும் அப்பா தான் என்னுடைய ஆள் டைம் ஹீரோ!  அப்பா அம்மா சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமும் பார்த்திருக்கேன்" என்று கெத்தாக முடிக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!