பாரதிராஜாவோட திடீர் ராஜினாமாவுக்கு இதுதாங்க காரணம்...

Published : Jul 02, 2019, 04:10 PM IST
பாரதிராஜாவோட திடீர் ராஜினாமாவுக்கு இதுதாங்க காரணம்...

சுருக்கம்

“ஒரு மனதாக தேர்வு செய்து விட்டு பின்னர் வேறு மாதிரியான கருத்துகளை சொல்வது எனக்குப் பிடிக்காது. உங்களுக்கு தேர்தல் நடத்தித்தானே தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்கிறீர்கள். நான் விலகிக் கொள்கிறேன்” என்று பாரதிராஜா சில இயக்குநர்களிடம் குமுறியிருக்கிறார்.  

“ஒரு மனதாக தேர்வு செய்து விட்டு பின்னர் வேறு மாதிரியான கருத்துகளை சொல்வது எனக்குப் பிடிக்காது. உங்களுக்கு தேர்தல் நடத்தித்தானே தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்கிறீர்கள். நான் விலகிக் கொள்கிறேன்” என்று பாரதிராஜா சில இயக்குநர்களிடம் குமுறியிருக்கிறார்.

தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு சமீபத்தில் நடைபெற்றபோது எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் பாரதிராஜா.அப்போது தலைவர் பதவியை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட பாரதிராஜா தனது இயக்குனர் சங்க தலைவர் பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

‘‘கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொழுக்குழுவில் நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இணை துணை, உதவி இயக்குனர்கள் பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி! ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்காலத்துக்கும் எனது வழிகாட்டுதலும், பேரன்பும் என்றும் தொடரும்…’’ என்று ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பாரதிராஜா இன்னும் பதவியே ஏற்கவில்லை என்பது ஒருபக்கம் இருக்க, அவருடைய ராஜினாவுக்கான காரணம் குறித்து திரையுலகில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.அவரை தலைவராக தேர்வு செய்ததை எதிர்த்து இயக்குநர் ஜனநாதன் உட்பட சிலர் எதிர்கருத்துக்கள் சொன்ன நிலையில் இன்னும் சிலர் அவரது தேர்வை எதிர்த்துக்கோர்ட்டுக்கு செல்லவிருப்பதாக பாரதிராஜாவுக்கு தகவல் சென்றதாகவும் அந்த கோபத்தில்தான் அவர் ராஜினாமா செய்ததாகவும் புதிய தகவல்கள் வருகின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு
பிரம்மாண்ட கூட்டணி! ‘டேவிட் ரெட்டி’ படத்தில் ராம் சரண் - சிம்பு கேமியோ? மிரட்டும் அப்டேட்!