வறுமையில் வாடிய பாக்யராஜ் பட காமெடி நடிகருக்கு உதவிய வில்லன் நடிகர்...

Published : Jul 02, 2019, 03:45 PM IST
வறுமையில் வாடிய  பாக்யராஜ் பட காமெடி நடிகருக்கு உதவிய வில்லன் நடிகர்...

சுருக்கம்

தனது படத்தில் அறிமுகமான நகைச்சுவை நடிகர் ஒருவர் நோய், வறுமையால் வாடிக்கொண்டிருப்பதை அறிந்து பிரபல இயக்குநர் பாக்யராஜ் உதவ முன்வராத நிலையில், அவருக்கு பிரபல வில்லன் நடிகர் சவுந்தரராஜா உதவ முன் வந்திருக்கிறார்.  

தனது படத்தில் அறிமுகமான நகைச்சுவை நடிகர் ஒருவர் நோய், வறுமையால் வாடிக்கொண்டிருப்பதை அறிந்து பிரபல இயக்குநர் பாக்யராஜ் உதவ முன்வராத நிலையில், அவருக்கு பிரபல வில்லன் நடிகர் சவுந்தரராஜா உதவ முன் வந்திருக்கிறார்.

கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் முக்கியமான படம் சுந்தரகாண்டம். அந்த படத்தில் நமசிவாயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தகோபால். சில காட்சிகளே வந்தாலும், 'டேய்... சண்முகமணி' என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர். தற்போது இவர் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கு நடிகர் சவுந்தரராஜா உதவி செய்திருக்கிறார். இதுகுறித்து தனது முகநூல்பக்கத்தில் பதிவிட்ட சவுந்தரராஜா , ‘பெரும்பாலான திரைப்பட நடிகர்கள் இன்னும் போராட்ட வாழ்க்கையில் தான் எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் நாம் எல்லா உதவிகள் செய்ய இயலாது., அது இயல்புதான் இருந்தாலும் மெடிக்கல் உதவிகள் பெறமுடியாதவர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு அன்பையும், ஆதரவையும் கொடுப்போம். 

சகோ பிளாக் பாண்டியின் மூலம் நடிகர் நந்தகோபால் அவரின் நிலைமை அறிந்து நேரில் சென்று என்னால் இயன்ற பணத்தையும், பழங்களும் கொடுக்கும்போது அவர் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அப்போது அவர் சொன்ன வார்த்தை சீக்கிரம் குணமடைந்து நான் சாதிக்க வேண்டும் என்று கூறினார். அன்பால் இயன்றதை கொடுப்போம். உதவி செய்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்வோம் வாழவைத்து வாழ்வோம்’ என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு
பிரம்மாண்ட கூட்டணி! ‘டேவிட் ரெட்டி’ படத்தில் ராம் சரண் - சிம்பு கேமியோ? மிரட்டும் அப்டேட்!