எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்த ஏழு பேர்! யாரை காப்பாற்றுவார்கள் மக்கள்? முழு விவரம் இதோ!

Published : Jul 02, 2019, 03:00 PM ISTUpdated : Jul 02, 2019, 03:28 PM IST
எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்த ஏழு பேர்! யாரை காப்பாற்றுவார்கள் மக்கள்? முழு விவரம் இதோ!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வரும் வாரங்களில் இன்னும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனைகள், மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வரும் வாரங்களில் இன்னும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனைகள், மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில் நேற்றில் இருந்து, நாமினேஷன் படலம் துவங்கியது. போட்டியாளர்கள் 16 பேரும், வனிதா மற்றும் மோகன் வைத்தியாவை தவிர, மற்ற பிரபலங்களில் இருவரை காரணத்தோடு நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்தது.

அதன் படி, ஒவ்வொரு போட்டியாளராக காரணத்தை கூறி நாமினேட் செய்தனர். முதலில் பிக்பாஸ் அறைக்கு சென்ற மதுமிதா: கவின் - பாத்திமா பாபு ஆகியோர் பெயரை நாமினேட் செய்தார். அபிராமி: மதுமிதா - மீராமிதுன் ஆகிய இருவரை நாமினேட் செய்தார். சாக்சி: மதுமிதா -  மீராமிதுனையும், கவின்: மீராமிதுன் - மதுமிதா பெயரையே நாமினேட் செய்தார். ஷெரின்: மீராமிதுன்  - மதுமிதா பெயரை கூறினார். இவரை தொடர்ந்து, மீரா மிதுன்:  அபிராமி - சாக்சி பெயரை நாமினேட் செய்தார். சாண்டி: மதுமிதா - சேரன் ஆகியோரையும், வனிதா: மீராமிதுன் - சேரன், பெயரையும் கூறினார். தர்ஷன்: சாக்சி - மீராமிதுன் பெயரை நாமினேட் செய்தார்.  லாஸ்லியா: மீராமிதுன் - சரவணன் பெயரையும், ரேஷ்மா: மதுமிதா - பாத்திமாபாபு பெயரையும் கூறினார். இவர்களை தொடர்ந்து சேரன்: லாஸ்லியா -  தர்ஷன் பெயரையும், முகன்: மீராமிதுன் - சேரன் பெயரையும், மோகன் வைத்யா: சேரன் - பாத்திமாபாபு ஆகியோர் பெயரை நாமினேட் செய்துள்ளனர். 

இவர்களில், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டவர்கள் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடிப்பார்கள்.

அந்த வகையில் நேற்று நடந்த நாமினேஷனில் கவின், சாக்சி, சரவணன், பாத்திமா பாபு, சேரன், மீராமிதுன் மற்றும் மதுமிதா ஆகிய ஏழுபேர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இவர்களை மக்கள் தங்களுடைய ஓட்டுகள் மூலம் காப்பாற்ற முடியும் என்பது அனைவரும் அறிந்தது தான். அடுத்த வாரம் மக்களின் ஆதரவோடு யார் பிக்பாஸ் வீட்டில் இருக்க போகிறார். யார் வெளியேற போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு