அடக்கடவுளே... ரஜினி மிரண்ட ராக்கியை பார்க்க இரண்டே பேர்?.. அதிர்ச்சியில் படக்குழு

Kanmani P   | Asianet News
Published : Dec 25, 2021, 08:48 AM IST
அடக்கடவுளே... ரஜினி மிரண்ட ராக்கியை பார்க்க இரண்டே பேர்?.. அதிர்ச்சியில் படக்குழு

சுருக்கம்

ராக்கி படத்தின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போன ரஜினி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தார். என  ராக்கி படக்குழுவினருக்கு உற்சாகத்துடன் தெரிவித்திருந்தனர்..  

நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கி. இவர் ராம் இயக்கிய தரமணி படத்தில் நடித்தவர். ராக்கி படத்தில் ரோகினி, பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வேலை கடந்த 2 வருடங்களாக நடந்து வந்தது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் தங்களின் ரவுடிபேபி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தை நடிகர் ரஜினி தனது வீட்டில் பார்த்துள்ளார். படத்தின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போன ரஜினி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது ராக்கி படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த படம் கிருஸ்துமஸ் விருந்தாக கடந்த 23-ம் தேதி ரிலீஸ் ஆனது. சிறையில் இருந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் வரும் ராக்கி (வசந்த் ரவி), தன் தாய் மல்லியையும் (ரோகிணி) தங்கை அமுதாவையும் (ரவீணா ரவி) தேடுகிறான். ஆனால், தாய் கொல்லப்பட்டிருக்கிறாள். தங்கையைக் காணவில்லை. ராக்கி வெளியே வந்த தகவல் அறிந்ததும் பழைய பகைவனான மணிமாறன் (பாரதிராஜா) இவனைப் பழிவாங்கத் துடிக்கிறான். இதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை குருதி கொப்பளிக்கச் சொல்கிறது இந்த 'ராக்கி'.

இந்நிலையில்  இந்த படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அந்த தியேட்டரில் இரண்டு நபர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்க வந்திருப்பது தெரிகிறது. 

இந்த பதிவை பகிர்ந்திருக்கும் ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பெரிய ஸ்கிரீனில் பிரைவேட் ஸ்கிரீன் என்று நினைத்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையிலும் இயக்குனர் எந்த வருத்தமும் காட்டாமல் நம்பிக்கை இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் என பாராட்டி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!