
பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின்( T Rajendhar son) மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடிக்க துவங்கி, சிறிய வயதிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர். பின்னர் ஹீரோவாக மாறிய பின்னர், ஆக்ஷன், காதல், காமெடி என நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளதோடு, தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வவருகிறார்.
நடிகர் சிம்புவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும், எப்போதும் அவரை சுற்றியே இருக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இவரை பற்றி குறையாக அடுக்கி வந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மூக்கில் மீது விரல் வைக்கும் அளவுக்கு, ஆள் மட்டும் மாறாமல் தன்னையே ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொண்டு சர்ச்சைகைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார்.
இவரது டெடிகேஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக அமைத்தது என்றால் அது 'மாநாடு' (Maanaadu) படத்தின் வெற்றி என கூறலாம். கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் (goutham Menon) வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' (Vinnai thaandi Varuvaayaa) படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு சிம்பு அறிக்கை மூலம் ரசிகர்களுக்கும், பத்திரியாகையாளர்கள், மற்றும் படக்குழு உள்ளிட்ட அனைவருக்குமே தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருந்தார்.
தற்போது இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும், 'வெந்து தணிந்த காடு' (Venthu thanintha Kaadu) படத்தின் படப்பிடிப்பில் காலண்டகு கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிம்பு; அம்மா, அப்பாவை இனி பஞ்சாயத்தில் இழுத்து விடக்கூடாது. தங்கை கிறிஸ்டின், தம்பி முஸ்லீம், நான் இந்து என்பதால் வெள்ளிக்கிழமை தர்ஹா, ஞாயிறுன்னா சர்ச், மத்த நாள்களிலும் கோயிலுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். கொரோனா ஊரடங்கில் மட்டும் சுமார் 100 கோவில்களுக்கு சென்று வேண்டுதல் செய்துள்ளேன் என சிம்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.