
பிரபல பாலிவுட் நடிகையான் சுஷ்மிதா சென், தமிழில் நாகர்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்த இவர், முதல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சக்கலக்கா பேபி’ பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன்முதலாகப் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
45 வயதாகும் இவர், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் ரெனி, அலிசா என இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சுஷ்மிதா. இவர் சில சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுடனும் கிசுகிசுக்கப்பட்டவர். அதேபோல் 5 ஸ்டார் ஓட்டல் அதிபர் ஒருவருடன் அவருக்கு காதல் மலர்ந்து, அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரோமன் ஷால் என்கிற இளைஞன் மீது காதலில் விழுந்த சுஷ்மிதா சென், அவருடன் கடந்த 3 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் இடையே 15 வயது வித்தியாசம்.
இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் பிரிவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் இருவரும் நண்பர்களாக அறிமுகமானோம். நண்பர்களாகவே இருந்தோம்! எங்களது உறவு முறிந்து ரொம்ப நாளாச்சு... இருப்பினும் அன்பு அப்படியே தான் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.