ஜெயிச்ச காசு கைக்கு வரதுக்குள்ள இப்படியா? விரத்தியுடன் கூறி... பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த விஜயலட்சுமி!

Published : Dec 24, 2021, 08:00 PM IST
ஜெயிச்ச காசு கைக்கு வரதுக்குள்ள இப்படியா? விரத்தியுடன் கூறி... பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த விஜயலட்சுமி!

சுருக்கம்

சர்வைவர் நிகழ்ச்சியில் (Survivor show) கலந்து கொண்டு விளையாடி சிங்கப்பெண் என்பதை நிரூபித்துள்ளார் பிரபல நடிகை விஜய லட்சுமி (Vijaylakshmi), தன்னை பற்றி வரும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து விரதியுடன் கூறியுள்ளது மட்டும் இன்றி, பகீர் குற்றச்சாட்டு ஒன்றையும் முன் வைத்துள்ளார்.  

சர்வைவர் நிகழ்ச்சியில் (Survivor show) கலந்து கொண்டு விளையாடி சிங்கப்பெண் என்பதை நிரூபித்துள்ளார் பிரபல நடிகை விஜய லட்சுமி (Vijaylakshmi), தன்னை பற்றி வரும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து விரதியுடன் கூறியுள்ளது மட்டும் இன்றி, பகீர் குற்றச்சாட்டு ஒன்றையும் முன் வைத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக களம் இறங்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’சர்வைவர்’. இதை தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அர்ஜுன் , தொகுத்து வழங்கி வந்தார். ஒரு தீவில் இயக்கையோடு விளையாட கூடிய 'சர்வைவர்' போட்டியில் வெற்றி பெற, மன வலிமை, உடல் வலிமை, சமயோஜிதமாக யோசித்தால், போன்ற பல திறமைகளும் இருந்தால் தான் வெற்றிபெற முடியும் என்பதை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில தினங்களிலேயே மற்ற போட்டியாளர்கள் தெரிந்து கொண்டனர்.

காடர்கள் அணி, வேடர்கள் அணி என இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே இந்த நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். டாஸ்குகளும் கடுமையாகிக்கொண்டே சென்று கொண்டிருந்த நிலையில், இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தொகுப்பாளர் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

சுமார் 2 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இறுதி போட்டியில் விஜய லட்சுமி, வேனசா மற்றும் சரண் கடுமையான போட்டிகளை எதிர்கொண்ட நிலையில், இறுதியில் விஜயலட்சுமி சாமர்த்தியமாக விளையாடி வெற்றி பெற்றார். இவர் வெற்றிபெற்றதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தாலும், சிலர் தொடர்ந்து இவரை சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதனால் வேதனை அடைந்து, இது குறித்து அவர் கூறுகையில், நிகழ்ச்சி தொடங்கும் போதே பரிசு பணம் கைக்கு வர இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறி இருந்தனர் என்றும் அதனால் பரிசுப்பணம் ஒரு கோடி என் கைக்கு கூட வரவில்லை. அதற்குள் தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் சமூக வலைத்தளங்களில் அதிகம் வருவது வேதனையாக உள்ளது என விரக்தியுடன் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப்பற்றி நெகட்டிவாக விமர்சனம் செய்ய ஒரு சிலர் பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்றும் பகீர் குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்துள்ளார். இந்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

HBD Rajinikanth : கோலிவுட்டின் ‘பவர்ஹவுஸ்’... இந்திய சினிமாவின் ராஜாதி ராஜா ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று..!
மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!