
பத்து ஆண்டுகளுக்கு பிறகு 'ராதே ஷியாம்' படம் மூலம் மீண்டும் காதல் படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியான, சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று டிரெய்லர் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. பிரபாஸுக்கும் பூஜா ஹெக்டே விற்கும் இடையிலான காதல் தான் படத்தின் முக்கிய அம்சமாக டிரெய்லர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் காதல் வாழ்க்கையை விதி எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் சாராம்சம் என்பதை ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.
உலக புகழ்பெற்ற கைரேகை நிபுணர் விக்ரமாதித்யா என்கிற, கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து ரசிகர்கள் மனங்களை கொள்ளையடித்துள்ளார். பூஜா ஹெக்டே அழகு புதுமையாக இப்படத்தில் நடித்துள்ளார். வரலாற்று கோணம் படத்தின் இன்னொரு சிறப்பம்சமாக அமைந்துள்ளது. டிரெய்லரில் காட்டப்பட்டுள்ள கப்பல் காட்சியின் விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜிஐ பார்ப்பவர்களை பிரமிப்படைய செய்துள்ளது. காட்சிகளுக்கு ஏற்றார் போல பின்னணி இசை மேலும் அழகு சேர்க்கிறது. இதில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி 14 ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.