ஏ.ஆர்.ரகுமானுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை..! முழுக்க முழுக்க பொய்.. தி குரூப் நிறுவனம் கொடுத்த விளக்கம்!

Published : Sep 27, 2023, 09:42 PM IST
ஏ.ஆர்.ரகுமானுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை..! முழுக்க முழுக்க பொய்.. தி குரூப் நிறுவனம் கொடுத்த விளக்கம்!

சுருக்கம்

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக, ரூபாய் 29 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையி இது குறித்து, தி குரூப் நிறுவனம் விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரின் உதவியாளர் சேலத்தில் வேலன் மீது,  அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் காவல்துறையிடம் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சர்ச்சைக்கு தற்போது தி குரூப் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. 

அதில், கடந்த 2018ம் ஆண்டு "ASICON 2018 Chennai" என்ற மூன்று நாள் நிகழ்வுக்காக ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில  நிகழ்ச்சிகளை  நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்கள்.  நாங்கள் ஏ.ஆர். ரகுமானிடம் பேசி அனுமதி பெற்றோம். இதன்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தோம். அப்போது ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக அவரின்

பெயரில் 25 லட்சம் ரூபாய் காசோலை, வேறு நிகழ்ச்சிக்காக 25 லட்சம் ரூபாய் காசோலை என இரண்டு காசோலைகளை அந்த அமைப்பினர் வழங்கினார்கள். 

அந்த சமயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீங்களாகவே (சம்மந்தப்பட்ட அமைப்பு) நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் திரும்பி தரப்படாது என குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் முன்பணம் திரும்பி வழங்க தேவையில்லை என்ற நிபந்தனை உட்பட  அனைத்து விஷயங்களும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டு  கையெழுத்தானது.

பாக்கிய லட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ! வைரலாகும் புகைப்படம்!

"ASICON 2018 CHENNAI" நிகழ்வில் அதிக தொகை செலவிட இருந்ததால் இசை நிகழ்ச்சியை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழலல் ஏற்பட்டது. எனவே அவர்கள் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இருந்த போதிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட 25 லட்சம் காசோலை அந்த அமைப்புக்கு திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சி ரத்து செய்த நிலையிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட  காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. இதனால் ஏ.ஆர். ரகுமானுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த நிலையில் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரகுமானின் பெயரை இந்த புகாரில் இணைத்துள்ளனர். அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என தெரிவித்துள்ளது.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?