Breaking: அதிர்ச்சி... 29 லட்ச வாங்கிக்கொண்டு மோசடி செய்த ஏ.ஆர்.ரகுமான்! காவல்துறையில் பரபரப்பு புகார்!

Published : Sep 27, 2023, 06:17 PM ISTUpdated : Sep 27, 2023, 08:40 PM IST
Breaking: அதிர்ச்சி...  29 லட்ச வாங்கிக்கொண்டு மோசடி செய்த ஏ.ஆர்.ரகுமான்! காவல்துறையில் பரபரப்பு புகார்!

சுருக்கம்

ஏ.ஆர்.ரகுமான் 29 லட்சம் பெற்றுக் கொண்டு, திரும்ப தராமல் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்து சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் செப்டம்பர் 10ஆம் தேதி நடந்த 'மறைக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனியார் நிறுவனம் மூலம், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்.. அதிகப்படியான டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதால், பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை நிற்க கூட இடமில்லாமல் அவதிக்கு ஆளாகினர். கூட்ட நெரிசல் காரணமாக, வயதானவர்கள் முதல் இளம் பெண்கள் வரை மயங்கி விழுந்த சம்பவங்களும், கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் பாலியல் அத்து மீறல்களிலும்  ஈடுபட்டதாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாக, ஏ.ஆர்.ரகுமான் மீது பலர் தங்களுடைய விமர்சனங்களை வாரி இறைத்தனர்.

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்து வந்த 'சப்தம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!

பின்னர் இந்த நிகழ்ச்சிக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என 'மறக்கமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ சி டி சி நிறுவனம் தெரிவித்ததோடு,  இதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த குளறுபடிகள் குறித்து ஏ சி டி சி நிறுவனத்தின் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் ஏ ஆர் ரகுமான் தரப்பில் இருந்து, டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்கமுடியாமல் நஷ்டமடைந்த ரசிகர்கள் அவர்களின் டிக்கெட் காப்பியை தனக்கு இமெயில் செய்தால் அவர்களுக்கு உரிய பணம் திரும்ப கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், ஏ.ஆர்.ரகுமான் மோசடி செய்ததாக  மற்றொரு புகார் எழுந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சு அசல் பிரியா பவானி ஷங்கர் போலவே இருக்காங்களே..! கீர்த்தியின் அக்கா கவிதா பாண்டியனை வர்ணிக்கும் ரசிகர்கள்!

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், கொடுத்துள்ள இந்த புகார் மனுவில்... "கடந்த 2018 ஆம் ஆண்டு, இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரூபாய் 29.50 லட்சம் பணத்தை முன்பணமாக ஏ.ஆர்.ரகுமான் பெற்றுக்கொண்டார்.  பின்னர் மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததால், நிகழ்ச்சி நடைபெறவில்லை. பின்னர் இதற்கான முன் தொகையை திரும்ப கேட்டபோது அதனை அவர் தரவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் 29.50 லட்சம் தங்களிடம் மோசடி செய்த ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது உதவியாளர் செந்தில் வேலன் மீதும் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் கொடுத்துள்ள புகார் தற்போது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்
மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!