ஆடியோ லான்ச் விஷயத்தில் ரசிகர்களுக்கு ஐஸ் வைக்கும் தளபதி! சுட சுட வெளியான 'லியோ' செகண்ட் சிங்கிள் அப்டேட்!

Published : Sep 27, 2023, 07:06 PM ISTUpdated : Sep 27, 2023, 07:19 PM IST
ஆடியோ லான்ச் விஷயத்தில் ரசிகர்களுக்கு ஐஸ் வைக்கும் தளபதி! சுட சுட வெளியான 'லியோ' செகண்ட் சிங்கிள் அப்டேட்!

சுருக்கம்

'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா, அதிரடியாக ரத்து செய்யப்பட்ட நிலையில்... இதற்கு ஐஸ் வைக்கும் விதமாக தற்போது 'லியோ' படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.  

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, இரண்டாவது முறையாக நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். எனவே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உச்சத்தை எட்டி உள்ளது. 

'லியோ' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், அவ்வபோது படம் குறித்த சில அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான 'நா ரெடி' பாடல், பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது மட்டுமின்றி, பல்வேறு சர்ச்சைகளுக்கும் வித்திட்டது. 

Breaking: அதிர்ச்சி... 29 லட்ச வாங்கிக்கொண்டு மோசடி செய்த ஏ.ஆர்.ரகுமான்! காவல்துறையில் பரபரப்பு புகார்!

இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் அடுத்தடுத்து நான்கு 'லியோ' போஸ்டர்களை வெளியிட்டது. மேலும் செப்டம்பர் 30ஆம் தேதி, 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரமாண்ட முறையில் நடைபெற இருந்த நிலையில், இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று இரவு திடீரென, இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்தது.

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில்.. அனைவர் மத்தியிலும் பிரபல நடிகரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த நடிகை ஸ்வாதி

இதற்கு காரணம் அரசியல் அழுத்தம் மற்றும் போலி டிக்கெட்டுகள் வினியோகம் என கூறப்பட்டு வந்தாலும், இதனை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது. ரசிகர்களின் பாதுகாப்பு கருதியே இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததாக அறிவித்தது. மேலும் அவ்வபோது படம் குறித்த சுவாரசிய தகவல்களை அடுத்தடுத்தது வெளியிட உள்ளதாக அறிவித்தது. ஏற்கனவே ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதால், சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஐஸ் வைக்கும் விதமாக சுடச்சுட 'லியோ' செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படாஸ் என தொடங்கும் இந்த பாடல், நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சோகமாக இருந்த தளபதி ரசிகர்களை, உற்சாகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!