
நடிகை சமந்தாவின் 'பிரதியுஷா' தொண்டு நிறுவனம் மூலம் 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு தானம் செய்வதும், மருத்துவ உதவி செய்வதும், கல்விக்கு வழங்குவது என உதவுள்கள் செய்து வருகின்றனர். இதில் நடிகை சமந்தா ஆரம்ப காலத்திலிருந்தே சமூகப் பணிகளிலும், மருத்துவ உதவி செய்வதிலும் ஆர்வமாக செயல்பட்டு வந்தார். தனது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை ஏழைக் குழந்தைகளு மருத்துவம் கல்வி என உதவி வருகிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு 'பிரதியுஷா' என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ உதவிகளை தனது மருத்துவ நண்பர்களோடு செய்து வருகிறார் சமந்தா. இதுவரை இந்த அமைப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள்.
சமீபத்தில், தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் 15 குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற இருதய அறுவைச் சிகிச்சை முகாமில் 15 குழந்தைகளுக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சமந்தாவின் இந்த மனிதநேயமிக்க செயலுக்காக ட்விட்டரில் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
ஏற்கனவே 'பிரதியுஷா' தொண்டு நிறுவனத்திற்கு தன்னுடன் நடித்த நடிகர்களை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் நாயகி தான் என சமந்தாவை ரசிகர்கள் இதனால்தான் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.