200 பெண்களுடன் கிளுகிளுப்பாக கவர்ச்சி நடனம் ஆடிய சினேகன்!

First Published Nov 2, 2017, 1:09 PM IST
Highlights
snehan dance with 200 girls


அறிமுக இயக்குனர், விஜய சேகரன் இயக்கத்தில் வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிக  பொருட் செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘எவனும் புத்தனில்லை’. 

இந்தப் படத்தில் நபிநந்தி மற்றும்  ஷரத் என்கிற புதுமுக நடிகர்கள் கதாநாயகனாக நடிக்கின்றனர். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா ஆகியோர் நடிக்கின்றனர் . 

இந்தப் படத்தின் “எதுவும் தப்பில்லை, எவனும் புத்தனில்லை…" என்கிற பாடலை எழுதி, அந்தப் பாடலுக்கு 200 பெண் நடனக் கலைஞர்களுடன் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார், கட்டிப்புடி வைத்தியர் சினேகன்.

இந்தப் பாடல் காட்சி மிகப் பெரிய பொருட்செலவில் மலேசியா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் பிரமாண்ட செலவில் செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகர்  சங்கிலி முருகன், வேல ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் சினேகன் ஆடியுள்ள நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

click me!