நடிகர் சூர்யா நடிக்கும் 42-வது படத்தில், நடிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறுத்தை சிவா தரப்பில் இருந்து உற்சாகமான தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் கமர்சியல் மற்றும் ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடிக்கும் ஹீரோக்களை விட, இவருடைய கதை தேர்வு சமீப காலமாக மிகவும் வித்தியாசமாக இருந்து வருகிறது. கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதோடு... தயாரித்தும் வருகிறார். அதேபோல் சமூக கருத்து கொண்ட படங்களை இவர் தயாரித்து வருவதால், சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எழுப்பும் விதத்தில் உள்ளன.
சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில், நடித்து வந்த 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, பின்னர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. மேலும் இந்த தகவலை இயக்குனர் பாலாவும், சூரியாவும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்தார்.
எனவே தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 42 வது படத்தில் சூர்யா முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க தான்.... தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா தரப்பில் இருந்து நடிக்க ஆர்வம் உள்ளவர்கள், தங்களுடைய விவரங்களை அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா தரப்பில் இருந்து வெளியாகி உள்ள இந்த தகவலில் கூறியுள்ளதாவது.. "சூர்யா 42-வது படத்தில் நடிக்க பாடி பில்டர்ஸ் போல் உடல் கட்டுடன், நீண்ட தாடி மற்றும் மீசை கொண்ட நபர்கள் தங்களின் புகைப்படங்களோடு நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களை தங்களுக்கு பகிரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பமுள்ள நடிகர்கள் resumesivateam@aol.com என்கிற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இந்த தகவல் சூர்யாவுடன் நடிக்க ஆசைப்படும் பலருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சூர்யா42-வது படத்தில் நடிக்க தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Casting Call For pic.twitter.com/OvztFWWs3j
— Studio Green (@StudioGreen2)