தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய். நடிகர் விஜய் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். கடுமையாக உழைக்க காத்திருங்கள். உங்களை நம்பி தான் இந்த நாடு உள்ளது என்று பேசியுள்ளார் நடிகர் மன்சூர் அலி கான்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.
லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக தொடர்ந்து பெரும் சாதனை படைத்து வருகிறது. லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது.
undefined
மேலும் உலகம் முழுவதும், முதல் 7 நாட்களில் ரூ.461 கோடியும் 12 நாட்களில் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இதில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் விழாவில் பேசிய போது, தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய். நடிகர் விஜய் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். கடுமையாக உழைக்க காத்திருங்கள். உங்களை நம்பி தான் இந்த நாடு உள்ளது.
விஜய் குடும்பத்தை காப்பாற்ற விஜயகாந்த் போல ஒருவர் வருவார் என பார்த்தால் ஜார்ஜ் வந்ததை பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலித்தது. திரிஷா கூட நடிக்கிறாங்கனு சொன்ன உடனேயே ஒத்துக்கிட்டேன். அவருடன் காட்சி இருக்கும் என நினைத்தேன் ஆனால் கிடைக்கவில்லை.
சரி மடோனா செபஸ்டியன் உள்ளார் அவருடனாவது விளையாடலாம் என பார்த்தால் தங்கச்சி என சொல்லி விட்டார்கள். அர்ஜூன் உடன் நிறைய சண்டை காட்சி இருந்தது. ஆனால் அது எதுவும் திரையில் வரவில்லை. ரசிகர்களே நாளைய தீர்பை எழுத தயாராக இருங்கள். புகைப்பிடிப்பதை, மது அருந்துவதை விட்டுவிடுங்கள் என்று மன்சூர் அலிகான் பேசினார்.