Mysskin: ஏர்போர்ட்டில் யூரின் போன அப்போ கூட கேட்டாங்க..! 'லியோ' சக்ஸஸ் மீட்டில் மிஷ்கின் கூறிய தகவல்!

By manimegalai a  |  First Published Nov 1, 2023, 8:13 PM IST

'லியோ' திரைப்படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், தளபதி விஜய் பற்றி பேசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 


'லியோ' படத்தின் வெற்றிவிழா தற்போது மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. தளபதி விஜயின் வருகையை தொடர்ந்து, நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் துவங்கிய நிலையில், இப்படத்தில் நடித்த பிரபலங்கள், மற்றும் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து பேச துவங்கியுள்ளனர்.

முதல் ஆளாக மேடைக்கு வந்து பேசிய, இயக்குனர் மிஷ்கின் "ஒரு மாசத்துக்கு முன் ஏர்போர்ட்டில் யூரின் போகும் போது கூட என்னை விடாமல் ஒருவர் லியோ அப்டேட் கேட்டார். இதை தொடர்ந்து வெளிநாட்டுக்கு சென்றாலும் அங்கும் 'லியோ' படத்தின் அப்டேட் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் மனதில் குடியேறியுள்ளார். மைக்கில் ஜாக்சன் மற்றும் புரூஸ்லீ ஆகிய இரண்டு ஜாம்பவான்கள் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் நான் என் கண்ணால் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய் தான்.

Tap to resize

Latest Videos

ஒரு துளி கூட, நான் அவரை மிகைப்படுத்தி பேசவில்லை. என் திரைவாழ்வில் நான் பணிபுரிந்த முதல் படம் விஜய் படம். 23 வருடத்தில் ஒரு நாளும் விஜயிடம் நான் கதை சொன்னதில்லை. 23 வருடத்தில் ஒரு துளி மாற்றமும் இல்லை. விஜய் போன்ற ஒரு மனிதனை கடும் உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை. நான் என்றுமே நேரத்தை கடைபிடித்தது கிடையாது

ஆனால் காலை 8 மணிக்கு மேக்கப்புடன் தயாராக இருக்கும் ஒரே நடிகர் விஜய் தான். நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனதும் அண்ணா என்று என் கையை பிடித்துக்கொண்டு அணைத்த தருணத்தை மறக்க மாட்டேன்.  விஜயை தம்பி என சொன்னதுக்காக எனக்கு எதிராக போஸ்டர் அடித்தார்கள். போஸ்டர் அடித்தவர் நூறாண்டு வாழட்டும். ஆனால் அதை விஜய் ரசிகர்கள் 100% செய்திருக்க வாய்ப்பே இல்லை. விஜய் 200 ஆண்டு வாழ வேண்டும். இந்த மேடையில் நிற்பதை கவுரமாக பெருமையாக கருதுகிறேன் விஜய் நிஜத்திலும் ஒரு ஹீரோ தான் என கூறினார்.

click me!