தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடையை உச்சநீதி மன்றம் நீக்கியதோடு, தமிழகத்தில் இத்திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.
மே 5-ஆம் தேதி, வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி' இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியான போதே, இப்படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களும், இஸ்லாமிய கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து போர் கொடி உயர்த்திய நிலையில், இது சம்மந்தமாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, படத்தின் ரிலீசில் தலையிட முடியாது என்றும், இப்படத்திற்கு எதிராக எத்தனை மனு தாக்கல் செய்வீர்கள்? என கேள்வி எழுப்பியதோடு... இப்படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து, இப்படம் வெளியான போதிலும், இந்த படத்தின் கதைக்களம் சர்ச்சையை ஏற்படுத்துவதாகவே இருந்தது. அதாவது கேரளாவில் வாழந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களை, வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைத்து, குற்ற செயல்களில் ஈடுபடுத்தியதாக காட்டப்பட்டிருந்தது. எனவே இந்த படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்படம் தமிழகத்தில் உரிய போலீஸ் பாதுகாப்புடன், மால்களில் மட்டுமே திரையிடப்பட்டாலும் அதையும் மீறி சிலர் திரையரங்குகளுக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட உரிமையாளர்கள் பலர் இப்படத்தை மூன்றே நாட்களில் திரையரங்கில் இருந்து தூக்க முடிவு செய்தனர். இப்படத்திற்கு பெரிதாக மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
ஆனால், மேற்கு வங்கத்திலும் இந்த படத்தை தடை செய்வதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட தயாரிப்பாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரித்த நீதிபதி, மேற்கு வங்க மாநிலத்தில் தடை விதித்தது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு, இதற்கான காரணம் கேட்டு அம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார், மேலும் தமிழகத்தில் திரைப்படம் வெளியான சில தினங்களிலேயே திரையரங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி இருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திடீர் என சந்தித்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ்! வைரலாகும் புகைப்படம்..!
இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன் தினம் அதாவது மீ 16 ஆம் தேதி, உச்சநீதி மன்ற நோட்டீஸுக்கு தமிழக அரசு ' தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு மக்களிடம் புதிய வரவேற்பு இல்லாத காரணத்தினாலயே திரையரங்கில் இருந்து மூன்று நாட்களில் இப்படம் தூக்காட்டதாக தெரிவித்தது. அதேபோல் மேற்கு வங்க மாநிலம் சார்பாகவும் பதில் அளிக்கப்பட்டது.
திருமணமான ஒரே வருடத்தில் டைவர்ஸ்! முதல் முறையாக விவாகரத்து குறித்து பேசிய நடிகை சுகன்யா!
இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தடையை நீக்கியதாகவும், தமிழ்நாட்டில் இப்படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.