சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திடீர் என சந்தித்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ்! வைரலாகும் புகைப்படம்..!

By manimegalai a  |  First Published May 18, 2023, 2:59 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்திடீர் என சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 


கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தற்போது நடந்து வரும் IPL கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் சென்னையை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர், போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள, ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினர். இவர்கள்  இருவரும், ரஜினியின் தீவிர ரசிகர்கள் என்பதன் காரணமாகவே ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது, மேலும் இவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Tap to resize

Latest Videos

விஷ்ணுகாந்த் இதுக்கு மேல உனக்கு மரியாதையே இல்ல.. உறவினரை மிரட்டியதால் போலீஸ் வரை சென்ற சம்யுக்தா!

இவர்களை தொடர்ந்து, மற்றொரு கிரிக்கெட் ஜாம்பவான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. கேரவனின் இருக்கும் போது, எடுத்து கொண்ட புகைப்படத்தை, கபில் தேவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரஜினியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

திருமணமான ஒரே வருடத்தில் டைவர்ஸ்! முதல் முறையாக விவாகரத்து குறித்து பேசிய நடிகை சுகன்யா!

கபில் தேவ், 80-90 களில் இந்திய அணியின் சிறப்பிக்கு மிக  வீரராகவும், இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி சென்ற கேப்டனாகவும் இருந்து தன்னுடைய அதிரடி விளையாட்டின் மூலம் பல வெற்றிகளை இந்தியாவுக்கு தேடி தந்தவர். குறிப்பாக  இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை பெற்று தந்த பெருமை கபில் தேவ்வையே சேரும். தன்னுடைய 16 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் 5,248 டெஸ்ட் ரன்கள், 3,783 ஒரு நாள் ரன்கள், 434 டெஸ்ட் விக்கெட்டுகள் மற்றும் 253 ஒருநாள் விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார் கபில். மேலும் இவருடைய வாழ்க்கை வரலாறு 86 என்கிற பெயரில் 83 என்கிற பெயரில் படமானது. இதில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். இவரின் மனைவியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெருமைக்கு சொந்தக்காரரான, கபில் தேவ் - ரஜினிகாந்த் சந்திப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே ரஜினிகாந்த் - கபில் தேவ் இருவரும் நண்பர்கள் என்பதால், இது நட்பு ரீதியான சந்திப்பாகவே இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.  

click me!