“கே.பாலச்சந்தரிடம் இருந்த அந்த ஒன்றை நான் யாரிடமும் பார்த்ததில்லை”... ரஜினிகாந்தின் உருக்கமான வீடியோ...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 9, 2020, 1:02 PM IST
Highlights

அவரால் வாழ்ந்தவர்கள் பலர். தன் வாழ்நாளில் படம் இயக்கி, தயாரித்து சின்னத்திரையிலும் ஈடுபட்டு எத்தனையோ பேருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கவிதாலயா தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பேசிய ரஜினிகாந்த், 

 

இன்று என்னுடைய குருவான கே.பி.சார் உடைய 90வது பிறந்தநாள். கே.பாலச்சந்தர் சார் என்னை அறிமுகப்படுத்தாவிட்டால் கூட  நான் நடிகனாக ஆகியிருப்பேன். கன்னட மொழியில்  சின்னச்சின்ன கேரக்டரில் நடித்திருப்பேன். சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பேன். நான் இன்றும் பேரும், புகழோட, ஆண்டவன் புண்ணியத்தில் அதிக பேரும், புகழோடு நல்ல வசதியாக வாழ காரணம் கே.பாலச்சந்தர் சார் தான். என்னை தேர்ந்தெடுத்து, எனக்கு பெயர் வச்சி, என்னுடைய மைனஸ் எல்லாவற்றையும் நீக்கி, என்னிடமுள்ள ப்ளஸ் பாயிண்ட்களை எனக்கு தெரிவித்து முழு நடிகனாக்கி நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

இதையும் படிங்க:  “வனிதாவை பச்சை பச்சையாக கிழிக்க காரணம் இதுதான்”... போலீசை கண்டும் அஞ்சாத சூர்யா தேவியின் அடுத்த வீடியோ...!

என் வாழ்க்கையில் அப்பா, அம்மா, என்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணன், பாலசந்தர் ஆகிய நால்வரும் தெய்வங்கள். எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ நடிகர், நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். தன் வாழ்நாளில் படம் இயக்கி, தயாரித்து சின்னத்திரையிலும் ஈடுபட்டு எத்தனையோ பேருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 

இதையும் படிங்க: அடுத்த அதிர்ச்சி... 400 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

எத்தனையோ இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறேன், ஆனால் கே.பி. சார் செட்டுக்குள் வந்தால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை விடுங்கள், செட்டிக்கு மேல நிக்குற லைட்மேன் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்வார். அந்த மாதிரி ஒரு கம்பீரம் கே.பி சாரிடம் இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. கே.பி சார் வாழ்ந்த காலத்தில் மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக... எல்லாவற்றையும் சரியாகச் செய்தார். இன்னும் சிறிது நாள்கள் அவர் வாழ்ந்திருக்கலாம். மிகப்பெரிய மகான் எத்தனையோ பேருக்கு வாழ்வு கொடுத்து ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த என்குரு அவர்களை நினைவு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

click me!