
கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கு ஒருவழியாக இன்று தான் முடிவுக்கு வந்துள்ளது.
அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்கிற பழமொழிக்கேற்ப தெய்வத்தின் அனுக்கிரகத்தால் இன்று நீதி வென்றுள்ளது என பொதுமக்கள் பலர் ஒருவருவருக்கொருவர் இனிப்புகள் கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளதால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது மதிப்பும். மரியாதையும் கூடியுள்ளது.
இந்த தீர்ப்பை பலர் வரவேற்றுள்ள நிலையில் பிரபல பாடலாசிரியை தாமரை தனது சமூக வலைத்தளத்தில், 'அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.
மேலும் இதே போல பல பிரபலங்கள் தொடர்ந்து இதே வார்த்தையை கூறிவருகின்றனர். அரசியல் சூழலில் குழப்பம், ஜல்லிக்கட்டு போராட்டம் என பலர் ஜெயலலிதாவை பற்றி விஷயத்தில் தொய்வு ஏற்பட்ட நிலையில்.
தற்போது அம்மாவின் மரணத்தையும் 75நாள் என்ன சிகிச்சை மேற்கொள்ள பட்டது. என பிரபலங்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சசிகலா மேலும் சிக்கலுக்கு ஆளாவர் என எதிர்பார்க்க படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.