இதுவரை யாரும் தொடாத உச்சம்.. கேரளா Box Officeல் முத்திரை பதித்த லியோ - மாஸ் சம்பவம் செய்த தளபதி விஜய்!

By Ansgar R  |  First Published Nov 5, 2023, 12:15 PM IST

Leo Kerala Box Office : தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உலக அளவில் மாபெரும் ஹிட் திரைப்படமாக ஓடிவரும் லியோ திரைப்படம், கேரளா திரையுலகில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.


சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, இரண்டாவது முறையாக தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கி லியோ திரைப்படத்தை வெளியிட்டு இருந்தார் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லியோ திரைப்படம் முழுவதுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக இப்படத்தின் இறுதி காட்சியில் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் இடையிலான அந்த உரையாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. லோகேஷின் எல்சியு-வில் தளபதி விஜய் அவர்களும் இணைந்துள்ளதால், அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். 

Tap to resize

Latest Videos

இன்று ஒளிபரப்பாகும் லியோ பட வெற்றி விழா நிகழ்வு - அதற்கு முன் தளபதி வெளியிட்ட சில மாஸ் கிளிக்ஸ் இதோ!

உலக சினிமா அரங்கில் பல சாதனைகளைப் படைத்தவரும் தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படம், கேரளா திரையுலகிலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது கேரள சினிமா பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில், இதுவரை அதிக வசூலை ஈட்டிய முதல் தமிழ் திரைப்படம் என்கின்ற பெருமையை பெற்றுள்ளது லியோ திரைப்படம். 

இதன் மூலம் ஒரு புதிய ரெக்கார்டை உருவாக்கி, ரெகார்ட் மேக்கராக கேரளாவில் மாறியுள்ளார் தளபதி விஜய் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியான நிலையில், இப்போது வெற்றிகரமான தனது மூன்றாவது வாரத்தில் லியோ பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Rest in peace box-office records 🔥 pic.twitter.com/vqH8hDfTZO

— SreeGokulamMovies (@GokulamMovies)

போஸ் பாண்டி மகளா இது... 6 ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்த ஸ்ரீதிவ்யாவின் கலக்கல் கிளிக்ஸ்

இன்று நவம்பர் 5ஆம் தேதி பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு ஒளிபரப்பாக உள்ளது. தளபதி விஜய் அவர்கள் வெற்றி விழாவை முடித்த பிறகு தனது அடுத்த திரைப்பட பணிகளுக்காக தாய்லாந்து புறப்பட்டார். தளபதி 68 திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!