அமெரிக்கா சென்றிருந்த நடிகர் விஜய், தற்போது வெகேஷன் முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் 67-வது திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். லியோ படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் தற்போதே அப்படத்துக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
லியோ படத்தில் நடித்து முடிக்கும் முன்னரே நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் கமிட் ஆகிவிட்டார். தற்காலிகமாக தளபதி 68 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் தளபதி 68 படத்தையும் தயாரிக்க உள்ளது.
இதையும் படியுங்கள்... இங்குட்டு ஜவான்... அங்குட்டு லியோ; நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் 30 தமிழ் படங்கள் - என்னென்ன தெரியுமா?
தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால், அதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்ட முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, இதற்கான பணிகளுக்காக விஜய்யுடன் கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அதன் பணிகள் ஒருசில நாட்களில் முடித்துவிட்டு வெங்கட் பிரபு கடந்த வாரமே சென்னை திரும்பினாலும், நடிகர் விஜய் அங்கு தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் pic.twitter.com/QiBtzvWEbo
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பி உள்ளார். அவர் சென்னை விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. மாஸ்க் அணிந்தபடி நடந்து வந்த விஜய்யுடன் அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, சிறிது நேரம் கலந்துரையாடிய காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது. விரைவில் நடைபெற உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லப் போகும் குட்டி ஸ்டோரிக்காக தான் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தளபதி 68 பட ஹீரோயின் சினேகாவா? வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்..! ஆனா இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே பாஸ்!