
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் நடிகர் மாதவன் இன்று காலை விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த மாதவனுடன் புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர்கள் திரண்டனர் அவர்களுடன் மாதவன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் ராக்கெட்ரி என்கிற திரைப்படத்தை எடுத்தார். இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமானார். அதுமட்டுமின்றி இதில் நம்பி நாராயணனாக நடித்தும் அசத்தி இருந்தார். ராக்கெட்ரி திரைப்படம் கடந்தாண்டு திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள்... 'புஷ்பா' 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அல்லு அர்ஜூனால் கமல்ஹாசனுக்கு வந்த சிக்கல்?
ராக்கெட்ரி திரைப்படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டும் விதமாக அப்படத்திற்காக நடிகர் மாதவனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகராக திரைத்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்தாலும் இதுவரை ஒருமுறை கூட தேசிய விருது வாங்கிடாத மாதவன், இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கி சாதித்துள்ளார்.
ராக்கெட்ரி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்துள்ளதை அடுத்து அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் வந்து இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு நடிகர் மாதவனை காண குவிந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படியுங்கள்... தியேட்டரில் கூட்டமில்லை... சமந்தாவின் குஷியை ரிலீசான பத்தே நாளில் பார்சல் பண்ணி ஓடிடிக்கு அனுப்பிய படக்குழு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.