சினிமா துறையை பொறுத்தவரையிலும் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பு என்பது மிக மிக அரிதானது. ஆனால் அதை மிக நேர்த்தியாக பயன்படுத்தி, தற்பொழுது மீண்டும் முன்னணி நாயகனாக களமிறங்கி உள்ளவர்தான் பிரபல நடிகர் அருண் விஜய்.
தமிழில் மூத்த நடிகராக திகழ்ந்துவரும் விஜயகுமாரின் மூத்த மனைவி முத்து கண்ணு அவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவர் தான் அருண் விஜய். நடிகை கவிதா விஜயகுமார் மற்றும் மருத்துவர் அனிதா விஜயகுமார் ஆகிய இருவரின் தம்பி நடிகர் அருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கும் ஆரத்தி அருண் என்பவருக்கும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. கடந்த 17 ஆண்டுகளாக இந்த தம்பதியினர் மிக மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது தங்களது 17 வது வருட நிச்சயதார்த்த நாளை கொண்டாடும் இந்த தம்பதியினருக்கு, அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் ஆரத்தி அருண் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் இந்த 17 ஆண்டுகள் எப்படி ஓடியது என்று தெரியவில்லை, அது ஒரு அழகிய மழைக்காலம் கொண்ட ஆகஸ்ட் மாத மாலை நேரம், ஒரு பையன் கையில் பூக்களோடு வீட்டின் ஹாலில் அங்குமிங்குமாக, குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.
குறிப்பாக அவருடைய இதயம் பதட்டத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தது, அதேபோல தான் எனது இதயமும் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆனால் அங்கு நாங்கள் தனியாக சந்தித்துக்கொள்ளவில்லை, பத்துக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் எங்களை சூழ்ந்து இருந்தனர். அன்று நடந்தது ஒரு இன்பமான நிகழ்வு.
ஆனால் அது நடந்து இன்றோடு 17 ஆண்டுகள் கடந்து விட்டது, இருப்பினும் எந்த விதமான குறையும் இல்லாமல் சந்தோஷமாக நாம் பயணித்து வருகிறோம். ஆனால் இந்த முறை நீங்கள் என் அருகில் இல்லை, நான் உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறேன், சீக்கிரம் வீட்டுக்கு வாருங்கள் என்று தனது பதிவில் கூறியுள்ளார் ஆரத்தி.
நடிகர் அருண் விஜய் தற்போது தனது படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லா சர்க்கஸ் பண்றமா நீ... இடுப்பில் வளையத்தை மாட்டி வித்தை காட்டிய ஷிவானி - வைரல் வீடியோ இதோ